யாழ். பல்கலையில் 'த நெயில்' சஞ்சிகை வெளியீடு

23 Jan, 2025 | 06:28 PM
image

யாழ். பல்கலைக்கழக பொறியியல் பீடத்தின் குடிசார் மற்றும் சுற்றாடல் சங்கத்தின் முயற்சியில் உருவான 'த நெயில்' (The Nail) சஞ்சிகை வெளியீடு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இன்று வியாழக்கிழமை (23) காலை நடைபெற்றது. 

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் பிரதம விருந்தினராகவும், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா சிறப்பு விருந்தினராகவும், வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலர் ம.பற்றிக் டிறஞ்சன் கௌரவ விருந்தினராகவும் கலந்துகொண்டனர். 

இதன்போது ஆளுநர் தனது உரையில், 

முன்னைய காலங்களில் பொறியியலாளர்கள் பலர் இந்த மாகாணத்துக்காக அர்ப்பணிப்புடன் உழைத்திருந்தாலும் அவர்களின் அந்தக் கடின உழைப்பு பற்றி எந்தவொரு ஆவணங்களும் எங்களிடம் இல்லை. 

குறிப்பாக நாங்கள் அன்று தொடக்கம் யாழ்ப்பாணத்துக்கான ஆறு என்ற அடிப்படையில் ஆறுமுகம் திட்டம் தொடர்பில் பேசி வந்தாலும், அது தொடர்பில் முறையான – முழுமையான ஆவணங்கள் எங்களிடம் இல்லை. 

ஆனால் தற்போது வெளியிடப்படும் 'த நெயில்' சஞ்சிகை ஊடாக பொறியிலாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் அனுபவங்கள் அனைவருக்கும் பகிரப்படுகிறது. இது சிறப்பான முயற்சி. பாராட்டப்படவேண்டியது.

சவால்களை எதிர்கொள்ளாவிட்டால் எங்களின் ஆளுமையை விருத்தி செய்ய முடியாது. சவால்களை எதிர்கொள்ளும்போதுதான் அந்தச் சவால்களை நாங்கள் வெற்றிகொள்கிறோம். அதன் ஊடாக எங்கள் ஆளுமைகளை மேலும் விருத்தியடையச் செய்துகொள்ளலாம். மிகப் பரந்துபட்ட அனுபவமானது எழுத்துமூலமான போதனையை விட மேம்பட்டது. 

மாணவர்களின் புத்தாக்க சிந்தனைக்கும் இடமளிக்கும் வகையில் அவர்களுடைய ஆக்கங்களையும் இந்த சஞ்சிகையில் உள்வாங்கியமை சிறப்பம்சமாகும். புத்தகக் கல்விக்கு அப்பால் பரிசோதனைகள் - பயிற்சிகள் மாணவர்களுக்கு முக்கியம். அது இல்லாமல் அவர்களது அறிவு முழுமையடையாது என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு விவேகானந்தா கல்லூரியின் பழைய மாணவர்...

2026-09-15 16:50:10
news-image

கொட்டகலையில் விநாயகர் சிலைகள் கையளிப்பு

2026-09-15 10:54:59
news-image

மனையாவெளி திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஸ்ரீ வல்லபசக்தி...

2026-09-15 10:39:48
news-image

யோகக்கலை கற்கைநெறி நல்லூரில் ஆரம்பம்

2026-09-15 11:59:51
news-image

பம்பலப்பிட்டி மாணிக்க விநாயகர் ஆலயத்தில் எண்ணெய்காப்பு...

2026-09-15 06:02:11
news-image

வவுனியா நகரில் இலக்கிய சந்திப்பு-2

2026-09-14 18:49:38
news-image

கொழும்பில் ‘EOLLLIM 2026’ கொரிய கலாசார...

2026-09-14 13:51:56
news-image

அகில இலங்கை தமிழ் மொழித்தின விழா:...

2026-09-13 17:20:18
news-image

கிண்ணியாவில் சர்வமதத் தலைவர்கள் பங்கேற்ற நபி...

2026-09-13 11:50:42
news-image

சமூக உயர்வுக்கு வித்திட்ட ஆசிரியர்களுக்கு வவுனியா...

2026-09-13 10:50:11
news-image

கொழும்பில் ஒன்றுகூடும் யாழ். புனித பத்திரிசியார்...

2026-09-12 13:31:05
news-image

பிரதமரின் தலைமையில் நடைபெற்ற 37ஆவது சரசவிய...

2026-09-10 16:06:31