யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீடத்தின் நான்காவது இளங்கலை மாணவர் ஆய்வு மாநாடு புதன்கிழமை (22) நடைபெற்றது.
யாழ்ப்பாண பல்கலைக்கழக பொன்விழா ஆண்டின் தொடர் நிகழ்வுகளில் ஒன்றாகவும், பல்கலைக்கழக சர்வதேச மாநாட்டுத் தொடரின் ஓர் அம்சமாகவும் இந்த இளங்கலை மாணவர் ஆய்வு மாநாடு நடைபெற்றது.
இன்று காலை 9 மணியளவில் மாநாட்டின் அழைப்பாளர் சிரேஷ்ட விரிவுரையாளர் எஸ். நிரோஷன் தலைமையில் கைலாசபதி கலையரங்கில் நடைபெற்ற ஆரம்ப நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாண பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா கலந்துகொண்டார்.
மாநாட்டின் தலைமையாளராக கலைப் பீடாதிபதி பேராசிரியர் சி. ரகுராம், திறப்புரையாளராக இலங்கை மத்திய வங்கியின் கண்காணிப்புப் பிரிவின் சிரேஷ்ட உதவிப் பணிப்பாளர் பாலகிருஷ்ணன் சிவதீபன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த மாநாட்டில் கலைப்பீடத்தின் சமூக விஞ்ஞானம் மற்றும் மனிதாயக் கற்கைகள் சார்ந்த 132 ஆய்வுக் கட்டுரைகள் பட்டப்படிப்பை நிறைவுசெய்து வெளியேறும் மாணவர்களால் சமர்ப்பிக்கப்பட்டன.
“மனிதாயக் கற்கைகளிலும் சமூக விஞ்ஞானத்திலும் எழுந்துவரும் போக்குகளும் எதிர்கால திசைகாட்டலும்” என்னும் கருப்பொருளில் நடைபெற்ற இந்த ஆய்வு மாநாடு, மாணவர்கள் தமது இறுதிவருட ஆய்வுச் செயற்பாட்டின் பேறான ஆய்வேடுகளை அடிப்படையாகக் கொண்டு தயாரித்த ஆய்வுக்கட்டுரைகளை வெளிக்கொண்டுவரும் முயற்சியாக அமைந்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM