2024ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை கடந்த செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதி நடைபெற்றது. இதன்போது 244,092 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியிருந்தனர்.
மாவட்டங்களுக்கான தமிழ் மற்றும் சிங்கள மொழி மூலங்களுக்கான வெட்டுப்புள்ளிகளும் வெளியிடப்பட்டுள்ளன. அதற்கமைய கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, மாத்தளை, காலி, மாத்தறை, குருணாகல் மற்றும் கேகாலை மாவட்டங்களுக்கு தமிழ் மொழி மூலத்துக்கான வெட்டுப்புள்ளி 141 ஆகும். இதுவே அதிகூடிய வெட்டுப்புள்ளியாகும்.
இதேபோன்று இதற்கு அடுத்தபடியாக இரண்டாவது ஆகக் கூடிய வெட்டுப்புள்ளி 139 ஆகும். நுவரெலியா, அம்பாந்தோட்டை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் பதுளை மாவட்டங்களுக்கு வெட்டுப்புள்ளி 139 ஆகும். மேலும் மன்னார், முல்லைத்தீவு, திருகோணமலை, புத்தளம், அநுராதபுரம், பொலன்னறுவை மற்றும் மொனராகலை மாவட்டங்களுக்கான வெட்டுப்புள்ளி 138 ஆகும். இரத்தினபுரி மாவட்டத்துக்கு மாத்திரம் 136 வெட்டுப்புள்ளியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM