அமெரிக்கத் தூதுவர் - சுகாதார அமைச்சர் சந்திப்பு : அரச வைத்தியசாலைகளுக்கான மருந்துகளை உற்பத்தி செய்வது தொடர்பில் பேச்சு

23 Jan, 2025 | 06:46 PM
image

(செ.சுபதர்ஷனி)

நாட்டில் ஏற்படக்கூடிய  மருந்து தட்டுப்பாட்டை தவிர்ப்பதற்காக அடுத்த இரண்டு ஆண்டுகளில் சகல அரச வைத்தியசாலைகளுக்கும் தேவையான மருந்துகளை உற்பத்தி செய்வதற்கான விசேட செயற்றிட்டம் அரசாங்கத்தின் ஆதரவுடன் அவசரமாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்  மற்றும் சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு கடந்த செவ்வாய்க்கிழமை (21) சுகாதார அமைச்சில் இடம்பெற்றிருந்தது. 

மேற்படி கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இச்சந்திப்பின்போது, நாட்டின் சுகாதார சேவை மற்றும் ஊடகத்துறையின் தற்போதைய நிலைமை, சுகாதார மற்றும் ஊடகத் துறையின் எதிர்கால அபிவிருத்திக்காக அமெரிக்க அரசாங்கம் வழங்கிய உதவிகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது. 

நாட்டின் இலவச சுகாதார சேவையை வலுப்படுத்துவதன் மூலம் தரமான மற்றும் சிறந்த சுகாதார சேவையை பொதுமக்களுக்கு தொடர்ச்சியாக வழங்க அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள விசேட வேலைத்திட்டம், ஆரம்ப சுகாதார சேவையை மேம்படுத்துவதற்காக  ஒழுங்கமைக்கப்பட்டுள்ள செயற்றிட்டம் தொடர்பிலும் சுகாதார அமைச்சர் அமெரிக்கத் தூதுவருக்கு விளக்கமளித்திருந்தார்.

மேலும், சுகாதார சேவையுடன் ஆயுர்வேத வைத்திய முறையையும் ஒன்றிணைத்து சுற்றுலா கைத்தொழிலை மேம்படுத்தும் நோக்கில் விசேட செயற்றிட்டம் ஒன்று ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.  நாட்டில் ஏற்படக்கூடிய மருந்து தட்டுப்பாட்டை தவிர்ப்பதற்காக அடுத்த இரண்டு ஆண்டுகளில், இலங்கையில் உள்ள அரச  வைத்தியசாலைக்கு தேவையான மருந்துகளை உற்பத்தி செய்வதற்கான விசேட வேலைத்திட்டம் அரச ஆதரவுடன் அவசரமாக நடைமுறைப்படுத்தப்படும்.  அத்தோடு ஊடகவியலாளர்களுக்கான பயிற்சிகளை வழங்கும் ஊடக நிறுவனமொன்றையும் விரைவில் ஆரம்பிப்பதற்கான திட்டங்கள் தயாராகி வருவதாக அமைச்சர் அமெரிக்கத் தூதுவரிடம் தெரிவித்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த அமெரிக்கத் தூதுவர், இலங்கையின் இலவச சுகாதார சேவைக்கு அமெரிக்க அரசாங்கத்தின் சார்பில் எனது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன். குறைந்த செலவில் உயர்தரமான சேவை இந்நாட்டில் வழங்கப்படுகிறது. 

கடந்த காலங்களில் சுகாதார அமைச்சுக்கும்  இந்நாட்டின் சுகாதார சேவையின் அபிவிருத்திக்கும் தேவையான உதவிகளை அமெரிக்க அரசாங்கம் வழங்கியிருந்தது. 

இலங்கையில் தற்போது நிலவும் சுகாதார சவால்களை வெற்றி கொள்வதற்கு சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடகத் துறையின் அபிவிருத்திக்கும் நிதி, தொழில்நுட்ப, அறிவு மற்றும் உடல் ரீதியான ஆதரவைத் தொடர்ந்து வழங்க அமெரிக்க அரசாங்கம் தயாராக உள்ளது என்று  உறுதியளித்திருந்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

திருகோணமலை – கொழும்பு பகல்நேர ரயில்...

2025-02-08 11:55:17
news-image

நாரங்கல பகுதியில் புதையல் தோண்டிய நால்வர்...

2025-02-08 11:51:45
news-image

கணவனால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு மனைவி...

2025-02-08 11:28:56
news-image

மாத்தறையில் கால்வாயிலிருந்து ஆணின் சடலம் மீட்பு!

2025-02-08 11:19:51
news-image

யாழ். கட்டைக்காடு கடற்கரையில் கொக்கெய்ன் போதைப்பொருள்...

2025-02-08 11:02:22
news-image

முல்லைத்தீவில் பஸ் சாரதி மீது வாள்வெட்டுத்...

2025-02-08 09:59:53
news-image

வவுனியாவில் பாடசாலை ஒன்றில் உயர்தர மாணவன்...

2025-02-08 09:57:57
news-image

சுகாதாரத்துறை சார் ஊழியர்களுக்கான பணியிடமாற்றத்துக்கு நிறைவுகாண்...

2025-02-07 20:16:30
news-image

ஒரு சில தமிழ், முஸ்லிம் தலைவர்கள்...

2025-02-07 20:22:35
news-image

இன்றைய வானிலை

2025-02-08 06:05:17
news-image

புளியங்குளத்தில் மின்சாரம் தாக்கி 6 வயது...

2025-02-08 02:19:36
news-image

வவுனியாவில் முச்சக்கர வண்டியின் மேலதிக பாகங்களுக்கு...

2025-02-08 01:58:23