துறைமுகத்தில் சிக்கிக்கொண்டிருக்கும் 3 ஆயிரம் கொள்கலன்களை விடுவிப்பதற்கு அரசாங்கம் விரைவில் நடவடிக்கை எடுக்கவேண்டும் - முஜிபுர் ரஹ்மான்

Published By: Digital Desk 2

24 Jan, 2025 | 09:33 AM
image

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

துறைமுகத்தில் சிக்கிக்கொண்டிருக்கும் 3 ஆயிரம் கொள்கலன்களை விடுவிப்பதற்கு அரசாங்கம் விரைவில் நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லாவிட்டால் அதற்கு தாமதக் கட்டணங்களை செலுத்த வேண்டி ஏற்பட்டால் அதன் பாதிப்பு நுகர்வோருக்கே ஏற்படும். அத்துடன் நெல் அறுவடை இடம்பெற்று வருகின்றபோது அரசாங்கம் இதுவரை நெல்லுக்கான உத்தரவாத விலையை நிர்ணயிக்காமல் இருக்கிறது  என  எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (23) இடம்பெற்ற ஏற்றுமதி இறக்குமதிகள் தொடர்பான ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

அரசாங்கம் அதிகாரத்துக்கு வந்து 100 நாட்கள் ஆகின்றன. ஆனால் நாட்டின் பொருளாதாரத்துக்கு முக்கியமான இரண்டு விடயங்களை இன்னும் அரசாங்கத்துக்கு தீர்த்துக்கொள்ள முடியாமல் இருக்கிறது.குறிப்பாக சுங்கத்தில் சுமார் 3ஆயிரம் கொள்கலன்கள் சிக்கிக்கொண்டுள்ளன.இந்த கொள்கலன்களை வெளியில் விடுவித்துக்கொள்ளவும் அரசாங்கத்துக்கு இயலாமல் இருக்கிறது. இந்த நிலையில் அரசாங்கத்துக்கும் சுங்க அதிகாரிகளுக்கும் இடையில் முரண்பாடான நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நாட்டு மக்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஏனெனில் சுங்கத்தில் கொள்கலன்கள் சிக்கிக்கொண்டுள்ளதால், அதனால் ஏற்படுகின்ற தாமதக்காெடுப்பனவை இறக்குமதியாளர்கள் பொருட்களின் வடிலையை அதிகரித்து நாட்டு மக்களிடம் இருந்தே அறவிட்டுக்கொள்வார்கள். கொள்கலன் ஒன்று சுங்கத்தில் இருந்து குறைந்தது 3 நாட்களில் வெளியில் வரும். ஆனால் தற்போது 10 நாட்கள் வரை செல்கிறது.

இதனால் ஏற்படுகின்ற தாமத கொடுப்பனவும் அதிகரிக்கிறது. 20 அடி நீலமுள்ள கொள்கலன் ஒன்றுக்கு நாள் ஒன்றுக்கு மாதமக்கொடுப்பனவாக 25ஆயிரம் ரூபா செலுத்த வேண்டும். 40அடி கொள்கலன் ஒன்றுக்கு 50ஆயிரம் ரூபாவுக்கும் அதிகம் செலுத்த வேண்டும்.இன்று ஒரு கொள்கலன் ஒரு வாரத்த்துக்கும் அதிக காலம் சுங்கத்தின் கீழ் வைக்கப்பட்டிருக்கிறது. சில பொருட்களை இறக்குமதி செய்யும் போது டொலரின் பெருமதி 290 ரூபாவாக இருந்தது. ஆனால் தற்போது 300ரூபாவாக அதிகரித்துள்ளது. இந்த கண்க்கை செலுத்தியே அந்த பொருட்களை விடுவித்துக்கொள்ள வேண்டி இருக்கிறது.

ஆனால் இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதாக தெரியவில்லை.அதனால் கொள்கலன்களின் தாமதக்கட்டணம் அதிகரித்துள்ள நிலையில் அதனை நாட்டில் இருக்கும் நுகர்வோரே செலுத்த வேண்டி ஏற்பட்டுள்ளது. ஏனெனில் கொள்கலன்களில் மருந்து பொருட்கள், உணவுப்பொருட்கள், தொலைபேசி உபகரணங்கள் என பல பொருட்கள் இருக்கின்றன. இவை வெளியில் வரும்போது இந்த பொருட்கள் அனைத்தினதும் விலை அதிகரிக்கப்படுகிறது.அதனால் இந்த பிரச்சினையை அரசாங்கம் விரைவாக தீர்க்க வேண்டும்.

அதேபோன்று 30 சரக்கு கப்பல்கள் துறைமுகத்துக்கு வந்து திரும்பிச் சென்றுள்ளன. ஒரு கப்பல் மூலம் ஒரு லட்சம் ரூபா நட்டம் ஏற்படுகிறது.அதாவது 30இலட்சம் டொலர் அரசாங்கத்துக்கு கிடைக்கவேண்டிய வருமானம் இல்லாமல் போகிறது. இதற்கு பொறுப்புக்கூறுவது யார். இறுதியில் இந்த அனைத்து நட்டங்களும் வெளியில் இருக்கும் பொது மக்கள் பொருட்களை கொள்வனவு செய்யும்போது செலுத்தவேண்டி ஏற்படுகிறது.

அதேநேரம் 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டிருப்பதாக பிரதி அமைச்சர் தெரிவித்திருந்தார். ஆனால் அந்த கொள்கலன்களில் 80 வீதமானவை கட்டாயம் பரிசீலனை செய்யப்பட வேண்டியவை என சுங்க அதிகாரிகளின் தொழிற்சங்கம் தெரிவிக்கிறது. மேல்மட்டத்தில் இருந்து வந்த உத்தரவின் பேரிலேயே அவை விடுவிக்கப்பட்டதாக சுங்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அப்படியானால் மேலிடத்தில் இருந்து அந்த உத்தரவை வழங்கிய அதிகாரி  ஜனாதிபதியா, பிரதி அமைச்சரா,சுங்க பணிப்பாளர் நாயகமா? என்பதை அரசாங்கம் தெரிவிக்க வேண்டும்.

அடுத்த பிரதான பிரச்சினைதான் அரிசி தட்டுப்பாடு. அரிசி ஆலைகளில் இருந்து முறையாக அரிசி வெளியேற்றப்படுகிறதாக என கண்காணிக்க ஜனாதிபதி நுகர்வோர் அதிகாரசபை பிரதிநிதிகளை நியமித்திருந்தார். அவர்கள் அவ்ரகளின் பணியை சரியாக செய்தார்களா? தற்போது அந்த பணிக்கு இராணுவத்தை ஈடுபடுத்தப்போவதாக ஜனாதிபதி தெரிவித்திருக்கிறார். இது தொடர்பில் அந்த அதிகாரிகளின் அறிக்கை எங்கே?

தற்போது கிழக்கு மாகாணங்களில் நெல் அறுவடை இடம்பெற ஆரம்பித்துள்ளது. ஆனால் அரசாங்கம் இதுவரை நெலுக்கான உத்தரவாத விலையை தீர்மானிக்கவில்லை. அரசாங்கம் உத்தரவாத விலையை தீர்மானிக்காமல் இருப்பது தனியார் அரிசி ஆலை உரிமையாளர்கள் குறைந்த விலைக்கு பெற்றுக்கொள்வதற்காகவா என கேட்கிறோம். மிகவும் உணர்வு பூர்வமான இந்த பிரச்சினை தொடர்பில் நடவடிக்கை எடுத்து, நெலுக்கு உத்தரவாத விலையை வர்த்தமானிப்படுத்தாமல் அரசாங்கம் ஏன் மெளனம் காகக்கிறது என கேட்கிறோம். இந்த நிலை தொடருமானா அடுத்த போகத்தின்போது ஒரு கிலோ அரிசி விலை 300 ரூபாவுக்கும் பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்படும். 

அத்துடன் இறக்குமதி செய்யும் ஒரு கிலோஅரிசிக்கு 65ரூபா வரி அறவிடுகிறது. முதலாளித்துவ அரசாங்கங்கள்கூட அரிசிக்கு 2ரூபாவுக்கு மேல் வரி அறவிடவில்லை. ஆனால் உழைக்கும் வர்க்கத்தினர் என தெரிவிக்கும் இந்த அரசாங்கம் 65 ரூபா அறவிடுகிறது. தேங்காய் விலை 200 ரூபாவை தாண்டியுள்ளது.  4பேர் கொண்ட குடும்பத்துக்கு ஒருவேளை உணவுக்கு தேங்காய் சம்பலும் சோறும் சாப்பிட  இன்று ஆயிரம் ரூபா தேவைப்படுகிறது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இறுதிச் சடங்கு நிகழ்வில் தகராறு ;...

2025-02-12 10:05:14
news-image

139 பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு இடமாற்றம் 

2025-02-12 09:53:34
news-image

கஜேந்திரகுமாருக்கு நீதிமன்று அழைப்பாணை

2025-02-12 09:57:38
news-image

லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிறுநீரக...

2025-02-12 09:17:43
news-image

டான் ப்ரியசாத்துக்கு விளக்கமறியல்

2025-02-12 09:52:23
news-image

இன்றைய வானிலை

2025-02-12 06:42:10
news-image

இலங்கையில் ஆண் - பால் பாலினம்...

2025-02-11 22:32:27
news-image

மின் துண்டிப்பினால் ஏற்பட்ட நஷ்டம் தொடர்பில்...

2025-02-11 22:30:03
news-image

புலிகளால் 33,000 மெகாவோல்ட் மின் பிறப்பாக்கி...

2025-02-11 15:11:06
news-image

வானிலை மாற்றத்தை எதிர்கொள்ளக்கூடிய விவசாயத்துக்கான கூட்டுத்திட்டம்...

2025-02-11 22:26:46
news-image

இழப்பீடுகள் தொடர்பில் விரைவில் முழுமையான அறிக்கை...

2025-02-11 22:29:08
news-image

வீட்டை விட்டு வெளியேறுமாறு அரசாங்கம் உத்தியோகபூர்வமாக...

2025-02-11 15:56:24