வீட்டிற்குள் அத்துமீறிப் பிரவேசித்துள்ள திருடன் என தவறுதலாகக் கருதி தந்தையொருவர் 14 வயது மகனை துப்பாக்கி யால் சுட்டுக் கொன்ற விபரீத சம்பவம் அமெ ரிக்காவில் இடம்பெற்றுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் வியாழக்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன.

சம்பவ தினம் ஹமில்டன் பிராந்தியத்தில் வசிக்கும் குறிப்பிட்ட 72 வயது தந்தை தனது மகனான ஜியோர்தா மக்கை காரில் அழைத்துச் சென்று பஸ் நிலையத்தில் இறக்கி விட்டு வீடு திரும்பியுள்ளார்.

ஆனால் மகன் ஏதோ காரணத்தால் பயணத்தைக் கைவிட்டு வீடு திரும்பியுள்ளான்.

இந்நிலையில் அந்த வீட்டின் அடித்தள அறையொன்றிலிருந்து சத்தம் வருவதை கேட்ட தந்தை தனது துப்பாக்கி சகிதம் அங்கு வந்துள்ளார்.

இந்நிலையில் இருளில் இருந்த மகனை அடையாளம் தெரியாது திருடன் எனக் கருதிய தந்தை அவன் மீது துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளார்.

தொடர்ந்து தனது மகன் மீதே தான் தவறுதலாக துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதை அறிந்து அதிர்ச்சியடைந்த அவர், கழுத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு உள்ளாகியிருந்த தனது மகனை உடனடியாக சின்சினதி சிறுவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.

எனினும் மகன் அங்கு சிகிச்சை பலனளிக்காத நிலையில் உயி ரிழந்துள்ளான். இந்த வழக்கை மறுநாள் புதன்கிழமை விசாரித்த நீதிமன்றம் தந்தை மீது எதுவித குற்றச்சாட்டையும் சுமத்தாது விடுதலை செய்துள்ளது.

தனது மகனை தனது கையால் தவறு தலாக கொன்ற தந்தை எத்தகைய வேதனை உணர்வை அனுபவிப்பார் என் பதை கற்பனை செய்து பார்க்க முடியா துள்ளதாக பிராந்திய விசாரணையாளர் ஜோசப் டெற்றர்ஸ் தெரிவித்தார்.