(எம்.மனோசித்ரா)
ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்திக்கு இடையிலான கட்ட பேச்சுவார்த்தையொன்று புதன்கிழமை (22) இடம்பெற்றுள்ளது. இரு கட்சிகளினதும் பொதுச் செயலாளர்களுக்கிடையிலான இந்த பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நிறைவடைந்ததாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
ஐக்கிய தேசிய கட்சியுடன் கூட்டணியமைப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு அண்மையில் அங்கீகாரம் வழங்கியிருந்த நிலையில் கடந்த 18ஆம் திகதி அது குறித்த பேச்சுவார்த்தைகளும் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. அத்தோடு கடந்த 20ஆம் திகதி ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழுவிலும் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையிலேயே இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நேற்றையதினம் கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
அதனைத் தொடர்ந்து அன்றைய தினம் மாலை கொழும்பிலுள்ள நட்சத்திர ஹோட்டலொன்றில் இரு கட்சிகளினதும் பொதுச் செயலாளர்களது தலைமையில் இடம்பெற்றது.
இருதரப்பினருக்குமிடையில் வெற்றிகரமான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டன. உள்ளுராட்சிமன்றத் தேர்தல் உட்பட அடுத்த கட்ட நடவடிக்கைகளை எவ்வாறு முன்னெடுத்துச் செல்வது என்பது குறித்து இதன் போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. கூட்டணியாக தேர்தலில் போட்டியிடுவதா அல்லது தேர்தலில் தனித்து போட்டியிட்டு பின்னர் கூட்டணியமைத்து செயற்படுவதா என்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க, பேச்சுவார்த்தைகள் சிறந்த முறையில் இடம்பெறுகின்றன. பொதுக்கூட்டணியொன்றை அமைப்பதற்கு இணக்கப்பாட்டை எட்டுவதற்கு முயற்சிக்கின்றோம். எதிர்காலத்தில் இருதரப்பும் இணைந்து செயற்பட வேண்டும் என்பது ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது என்றார்.
பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவிக்கையில், பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நிறைவடைந்தது. பல பொது இணக்கப்பாடுகள் எட்டப்பட்டன. விரைவில் இறுதி இணக்கப்பாடும் எட்டப்படும். பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட தரப்பினர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துரையாடுவர். அதற்கமைய அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM