இந்தியாவிடம் 60 ஓட்டங்களால் தோல்வி அடைந்தது இலங்கை

23 Jan, 2025 | 04:18 PM
image

(நெவில் அன்தனி)

கொலாலம்பூர், பேயுமாஸ் ஓவல் மைதானத்தில் இன்று நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 உலகக் கிண்ண ஏ குழு கடைசிப் போட்டியில் மிக மோசமாக விளையாடிய இலங்கை 60 ஓட்டங்களால் தோல்வி அடைந்தது.

முதல் இரண்டு போட்டிகளில் துடுப்பாட்டத்தை முதலில் தெரிவு செய்த மனுதி நாணயக்கார, இந்தியாவுடனான போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்றும் களத்தடுப்பை தெரிவு செய்தது அணிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

அதுமட்டுமல்லாம் பதிலுக்கு துடுப்பெடுத்தாடியபோது துடுப்பாட்ட வரிசையில் ஏற்படுத்திய மாற்றங்களும் இலங்கை அணிக்கு பலன் தராமல் போனது.

மலேசியா, மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய அணிகளுக்கு எதிரான போட்டிகளில் முதலில் துடுப்பெடுத்தாடி 160க்கும் மேற்பட்ட ஓட்டங்களைப் பெற்ற இலங்கை, கடைசி லீக் போட்டியில் இந்தியாவுக்கு 100 க்கும்  மேற்பட்ட ஓட்டங்களைக் கொடுத்து மண்கவ்வியது.

இந்த சுற்றுப் போட்டியில் இலங்கைக்கு எதிராக இதுவரை பெறப்பட்ட அதிகூடிய மொத்த எண்ணிக்கை இதுவாகும்.

119 ஓட்டங்களை வெற்றி இலக்காக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட இலங்கை மகளிர் அணி 20 ஓவர்கள் தாக்குப்பிடித்த போதிலும் 9 விக்கெட்களை இழந்து 58 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வி அடைந்தது.

இலங்கையின் முன்வரிசை வீராங்கனைகள் ஐவர் பவர் ப்ளே நிறைவு பெறுவதற்கு முன்னரே ஆட்டம் இழந்தது அணிக்கு பேரிடியைக் கொடுத்தது.

முதல் இரண்டு போட்டிகளில் துடுப்பாட்டத்தில் பிரகாசித்த சஞ்சனா காவிந்தி, தஹாமி சனெத்மா, மனுதி நாணயக்கார ஆகிய மூவரும் ஒற்றை இலக்க எண்ணிக்கைகளுடன் ஆட்டம் இழந்தனர்.

இதன் காரணமாக இலங்கை அணி 50 ஓட்டங்களை எட்டுமா என்ற சந்தேகம் நிலவியது.

மத்திய வரிசையில் ரஷ்மிக்கா செவ்வந்தி மாத்திரமே சற்று நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி 15 ஓட்டங்களைப் பெற்றார்.

பந்துவீச்சில் பருணிக்கா சிசோடியா 7 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஷப்ணம் 9 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஜோஷித்தா 17 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

முன்னதாக இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட இந்திய மகளிர் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 118 ஓட்டங்களைப் பெற்றது.

ஆரம்ப வீராங்கனை ட்ரிஷா கொங்காடி மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 44 பந்துகளில் 5 பவுண்டறிகள் ஒரு சிக்ஸுடன் 49 ஓட்டங்களைப் பெற்று இந்திய அணியைப் பலப்படுத்தினார்.

அவரை விட மிதிலா விநோத் 16 ஓட்டங்களையும் வி. ஜே. ஜோஷித்தா 14 ஓட்டங்களையும் அணித் தலைவி நிக்கி ப்ரசாத் 11 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் ப்ரமுதி மெத்சரா 10 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் லிமன்சா திலக்கரட்ன 14 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அசேனி தலகுனே 24 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகி: ட்ரிஷா கொங்காடி.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீரர்களின் அபார ஆற்றல்களால் இலங்கை அமோக...

2025-02-14 19:11:52
news-image

ஆஸி.யை மீண்டும் வீழ்த்தி தொடரை முழுமையாக...

2025-02-14 00:18:39
news-image

ஐசிசி ஒழுக்க விதிகளை மீறிய பாகிஸ்தானியர்...

2025-02-13 19:28:02
news-image

கில் அபார சதம், கொஹ்லி, ஐயர்...

2025-02-13 18:17:21
news-image

ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண சிறப்பு தூதுவர்களாக...

2025-02-13 17:23:02
news-image

மாலைதீவில் கராத்தே பயிற்சி மற்றும் தேர்வு

2025-02-13 10:26:53
news-image

சுவிட்சர்லாந்தில் கராத்தே பயிற்சி பாசறை

2025-02-13 10:43:37
news-image

சரித் அசலன்க சதம் குவித்து அசத்தல்;...

2025-02-12 18:57:16
news-image

இலங்கையுடனான டெஸ்ட் தொடருக்குப் பின்னர் குனேமானின்...

2025-02-12 12:02:33
news-image

உலகக் கிண்ணத்துக்கு சிறந்த அணியை கட்டியெழுப்புவதை...

2025-02-11 19:22:29
news-image

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இலங்கை...

2025-02-11 09:21:46
news-image

ரோஹித் ஷர்மா 32ஆவது ஒருநாள் சதம்...

2025-02-10 12:42:11