(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
இலங்கை வங்கியின் மூலம் 2025 மற்றும் 2026 ஆம் வருடங்களில் எதிர்பார்க்கும் இலாபம் 100 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமாகும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக நிதி, திட்டமிடல் பிரதியமைச்சர் ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (23) வாய்மூல விடைக்கான கேள்வி வேளையில் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
இலங்கை வங்கியின் மூலம் 2025 மற்றும் 2026 ஆம் வருடங்களில் எதிர்பார்க்கும் இலாபம் 100 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமாகும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் இலங்கை வங்கியின் கடந்த வருடத்திற்கான இலாபம் 100 பில்லியன் ரூபாவாகும். அந்த இலாபம் தற்போது கணக்கீடு செய்யப்பட்டு வருகிறது.
சிட்டி வங்கிகளில் அதிக அனுபவமுள்ள அதிகாரியான கே. எம். எல். டி சொய்ஸா இலங்கை வங்கியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தனிப்பட்ட ரீதியில் எந்த விருப்பு வெறுப்புக்கும் இடம் கொடுக்காத திறமை மிகுந்த அதிகாரி என்பதை கவனத்திற் கொண்டே அந்த பதவிக்கு அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேவேளை வங்கி கட்டமைப்பில் எதிர்காலத்தில் தொழில்நுட்பத்தின் பிரயோகம் முன்னெடுக்கப்படும். அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM