வெற்றியை உண்டாக்கும் மந்திர வழிபாடு

Published By: Digital Desk 7

23 Jan, 2025 | 04:12 PM
image

இன்றைய சூழலில் எம்மில் ஒவ்வொருவரும் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான அத்தான் கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். சிலருக்கு எதிர்பார்த்ததை விட கூடுதலான வெற்றியும், சிலருக்கு எதிர்பார்த்ததை விட குறைவான வெற்றியும், சிலருக்கு எதிர்பார்த்த குறைந்தபட்ச வெற்றி கூட கிடைக்காமல் தோல்வியும் கிடைத்து வருகிறது.

இதற்கு ஒவ்வொருவருக்கும் நவகிரகங்களின் அருள் பார்வை வெவ்வேறு அளவுகளில் கிடைப்பதுதான் காரணம். இந்தத் தருணத்தில் நவக்கிரகங்களின் அருளை பரிபூரணமாய் பெறுவதற்கான சூட்சம மந்திரங்களை எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் முன்மொழிந்த இருக்கிறார்கள். 

நீங்கள் பன்னிரண்டு ராசிகளில் ஏதேனும் ஒரு ராசியில் தான் பிறந்திருப்பீர்கள். உங்களுடைய ராசிக்குரிய பிரத்யேக மந்திரத்தை நாளாந்தம் காலை 6:00 மணி முதல் 7 மணிக்குள் நீராடி விட்டு பூஜை அறையில் இறைவனை தியானித்து வெற்றியை தொடர்ச்சியாக பெற வேண்டும் என பிரார்த்தித்து பிரத்யேக மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும்.

மிதுனம்- துலாம் -கும்பம்- ஆகிய மூன்று ராசியினர் மட்டும் உங்களுடைய ஜாதகத்தில் சந்திரன் வளர்பிறையாக இருந்தால் இந்த மந்திரத்தை மனதில் உச்சரிக்காமல் வாய்விட்டு உரத்து உச்சரிக்க வேண்டும். தேய்பிறை சந்திரனாக இருந்தால் மனதில் உச்சரிக்க வேண்டும்.

இதனால் உங்களுக்கு நற்பலன்கள் கிடைப்பதை அனுபவத்தில் காணலாம். ஏனைய ராசியினரும் தங்கள் ராசிக்குரிய மந்திரத்தை வாய்விட்டு உரக்க உச்சரிக்கும் போது தான் அதனுடைய அதிர்வலை பிரபஞ்சத்தில் பரவி உங்களுடைய கோரிக்கை நிறைவேறும். இத்தகைய மந்திரத்தை தொடர்ந்து உச்சரித்து வாழ்க்கையில் வெற்றி பெற்று மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.

ஒவ்வொரு ராசிக்குரிய மந்திரங்கள்...

மேஷம் - ஓம் நமச்சிவாய !

ரிஷபம் - ஓம் நமோ நாராயணாய நமஹ!

மிதுனம் -  ஓம் கம் கணபதயே நமஹ!

கடகம்-  ஓம் சந்திர பகவானே நமோ நமஹ !

சிம்மம் - ஓம் பைரவாய நமோ நமஹ !

கன்னி -  ஓம் சரவணபவ !

துலாம் - ஓ மகாலட்சுமியே நமோ நமஹ!

விருச்சிகம் - ஓம் முருகா போற்றி! போற்றி!

தனுசு - ஓம் ஆஞ்சநேயா நமோ நமஹ!

மகரம் - ஓம் சனி பகவானே போற்றி !

கும்பம் - ஓம் மகா புருஷாய வித்மஹே!

மீனம் - ஓம் நமோ பகவதே வாசுதேவாய!

தொகுப்பு : சுபயோக தாசன்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முருகனின் அருளை பெறுவதற்கான சூட்சம வழிபாடு..!?

2025-02-06 17:20:36
news-image

நினைத்த காரியத்தை நடத்தி தரும் தேங்காய்...!!?

2025-02-05 23:15:14
news-image

தொழிலில் ஏற்படும் தடையை நீக்கும் சூட்சம...

2025-02-03 16:17:32
news-image

தடைகளை அகற்றும் எளிய வழிமுறை..?

2025-02-01 20:35:36
news-image

விசுவாவசு தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள்...

2025-01-31 22:24:19
news-image

கடனுக்கு தீர்வு காண்பதற்கான சூட்சமம்..?

2025-01-31 17:12:14
news-image

தோஷத்தை நீக்குவதற்கான தீப வழிபாடு மேற்கொள்வது...

2025-01-30 14:26:15
news-image

சூரிய பகவானின் பரிபூரண ஆசி கிடைப்பதற்கான...

2025-01-29 20:43:33
news-image

செல்வத்தை அதிகரிப்பதற்கான பிரத்தியேக விருட்ச வழிபாடு

2025-01-27 13:09:12
news-image

அதிர்ஷ்டத்தை அள்ளித்தரும் தமிழ் வழி எண்...

2025-01-25 16:24:32
news-image

தீபம் ஏற்றுவதில் கவனம் தேவையா..?

2025-01-24 16:44:40
news-image

வெற்றியை உண்டாக்கும் மந்திர வழிபாடு

2025-01-23 16:12:37