வருண் துல்லிய பந்துவீச்சு, அபிஷேக் அபார துடுப்பாட்டம்; இங்கிலாந்தை வென்றது இந்தியா  

23 Jan, 2025 | 12:01 PM
image

(நெவில் அன்தனி)

கொல்கத்தா ஈடன் கார்ட்ன்ஸ் விளையாட்டரங்கில் நேற்று புதன்கிழமை (22) இரவு நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட்களால் இந்தியா வெற்றிபெற்றது.

வருண் சக்ரவர்த்தியின் சிறப்பான பந்துவீச்சு, அபிஷேக் ஷர்மாவின் அதிரடி துடுப்பாட்டம் ஆகியவற்றின் உதவியுடன் வெற்றியீட்டிய இந்தியா, 5 போட்டிகள் கொண்ட தொடரில் 1 - 0 என்ற ஆட்டக் கணக்கில் முன்னிலை அடைந்துள்ளது.

இந்தியாவினால் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இங்கிலாந்து 20 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 132 ஓட்டங்களைப் பெற்றது.

போட்டியின் 8ஆவது ஓவரில் 2 விக்கெட்ளை மாத்திரம் இழந்து 65 ஓட்டங்களைப் பெற்று பலமான நிலையில் இருந்த இங்கிலாந்து அதன் பின்னர் இந்தியாவின் துல்லியமான பந்துவீச்சில் 67 ஓட்டங்களுக்கு எஞ்சிய 8 விக்கெட்களையும் இழந்தது.

முதல் இரண்டு விக்கெட்களை 17 ஓட்டங்களுக்கு இழந்து தடுமாறிய இங்கிலாந்துக்கு அணித் தலைவர் ஜொஸ் பட்லரும் ஹெரி ப்றூக்கும் 3ஆவது விக்கெட்டில் பகிர்ந்த 48 ஓட்டங்கள் உற்சாகத்தைக் கொடுத்தது.(65 - 3 விக்)

ஹெரி ப்றூக் 17 ஆட்டம் இழந்ததுடன் சீரான இடைவெளியில் 8 விக்கெட்கள் சரிந்தன.

ஜொஸ் பட்லர் தனித்து போராடி 44 பந்துகளில் 8 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 68 ஓட்டங்களைப் பெற்றார்.

பந்துவீச்சில் வருண் சக்கரவர்த்தி 23 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் அர்ஷ்தீப் சிங் 17 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அக்சார் பட்டேல் 22 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஹார்திக் பாண்டியா 42 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்தியா 12.5 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 133 ஓட்டங்களைப் பெற்று இலகுவாக வெற்றியீட்டியது.

சஞ்சு செம்சன், அபிஷேக் ஷர்மா ஆகிய இருவரும் 18 பந்துகளில் 41 ஓட்டங்களைப் பகிர்ந்து நல்ல ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

சஞ்சு செம்சன் 26 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்க, அடுத்து களம் புகுந்த அணித் தலைவர் சூரியகுமார் யாதவ் 3 பந்துகளை எதிர்கொண்டு ஓட்டம் பெறாமல் வெளியேறினார். (41 - 2 விக்.)

எனினும், அபிஷேக்  ஷர்மாவும் திலக் வர்மாவும் 3ஆவது விக்கெட்டில் அதிரடியாக 42 பந்துகளில் 84 ஓட்டங்களைப் பகிர்ந்து இந்தியா இலகுவாக வெற்றிபெறுவதற்கு உதவினர்.

அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய அபிஷேக் ஷர்மா 34 பந்துகளில் 5 பவுண்டறிகள், 8 சிக்ஸ்களுடன் 79 ஓட்டங்களைக் குவித்தார்.

திலக் வர்மா 19 ஓட்டங்களுடனும் ஹார்திக் பாண்டியா 3 ஓட்டங்களுடனும் ஆட்டம இழக்காதிருந்தனர்.

பந்துவீச்சில் ஜொவ்ரா ஆச்சர் 21 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

ஆட்டநாயகன்: வருண் சக்ரவர்த்தி.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீரர்களின் அபார ஆற்றல்களால் இலங்கை அமோக...

2025-02-14 19:11:52
news-image

ஆஸி.யை மீண்டும் வீழ்த்தி தொடரை முழுமையாக...

2025-02-14 00:18:39
news-image

ஐசிசி ஒழுக்க விதிகளை மீறிய பாகிஸ்தானியர்...

2025-02-13 19:28:02
news-image

கில் அபார சதம், கொஹ்லி, ஐயர்...

2025-02-13 18:17:21
news-image

ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண சிறப்பு தூதுவர்களாக...

2025-02-13 17:23:02
news-image

மாலைதீவில் கராத்தே பயிற்சி மற்றும் தேர்வு

2025-02-13 10:26:53
news-image

சுவிட்சர்லாந்தில் கராத்தே பயிற்சி பாசறை

2025-02-13 10:43:37
news-image

சரித் அசலன்க சதம் குவித்து அசத்தல்;...

2025-02-12 18:57:16
news-image

இலங்கையுடனான டெஸ்ட் தொடருக்குப் பின்னர் குனேமானின்...

2025-02-12 12:02:33
news-image

உலகக் கிண்ணத்துக்கு சிறந்த அணியை கட்டியெழுப்புவதை...

2025-02-11 19:22:29
news-image

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இலங்கை...

2025-02-11 09:21:46
news-image

ரோஹித் ஷர்மா 32ஆவது ஒருநாள் சதம்...

2025-02-10 12:42:11