அரசு மற்றும் தனியாருக்கு சொந்தமான பயிர்ச்செய்கை மேற்கொள்ளக்கூடிய நிலங்களை விவசாயத்திற்கு பயன்படுத்துவது கட்டாயம் என்றும், அதை கடைப்பிடிக்காத காணி மற்றும் நிலத்தின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் விவசாயம், கால்நடை, நிலம் மற்றும் நீர்ப்பாசனத்துறை அமைச்சர் கே. டி லால்காந்த தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் பெப்ரவரி மாதம் 15ம் திகதிக்கு பின்னர் உரிய வேலைத்திட்டம் தீவிரமாக அமுல்படுத்தப்படும் எனவும், பயிரிடப்படாத காணிகளை அரசு ஒருபோதும் கையகப்படுத்தாது எனவும் அமைச்சர் வலியுறுத்தி கூறியுள்ளார்.
கண்டியில் ஊடகவியலாளர் மத்தியில் உரையாற்றுகையில் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
விவசாயம், கால்நடைகள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சு இது தொடர்பான விடயத்தில் பெப்ரவரி 15 ஆம் திகதிக்கு பின்னர் தீவிரமாக தலையிடும்.
தற்போதைய அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டுள்ள ஆணை நாட்டை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆகவே, நிலத்தை உற்பத்தி செய்யாத அனைவருக்கும் எதிராக சட்டம் அமுல்படுத்தப்படும் என்றும் அவர் மேலும் கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM