தேர்தல் கணக்கறிக்கை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் உட்பட 09 பேர் மீதான விசாரணைகளை யாழ்ப்பாண பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது போட்டியிட்ட வேட்பாளர்கள் தமது செலவீன அறிக்கைகளை தேர்தல் ஆணைக்குழுவுக்கு சமர்ப்பித்துள்ளனர்.
இந்நிலையில் தேர்தல் ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்ட முறைப்பாடுகளுக்கு அமைய ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
அதன் அடிப்படையில், பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் உட்பட யாழ். தேர்தல் மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட்ட சசிகலா ரவிராஜ், அ.உமாகரன், சி.மயூரன், த.கிருஸ்ணானந், ந. கௌசல்யா, குருசாமி சுரேன் உட்பட 09 பேர் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதில் சசிகலா ரவிராஜிடம் பொலிஸார் வாக்குமூலங்களை பெற்றுக்கொண்டுள்ளனர். ஏனையவர்களிடமும் வாக்குமூலங்களை பெற்ற பின்னர் தேர்தல் ஆணைக்குழுவுக்கு விசாரணை அறிக்கைகளை சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை யாழ். தேர்தல் மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட்டவர்களில் இதுவரை தமது தேர்தல் செலவீன அறிக்கைகளை தேர்தல் ஆணைக்குழுவுக்கு சமர்ப்பிக்காத 35 பேருக்கு எதிராகவும் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM