ரொய்ட்டர்ஸ்
காசாவில் துப்பாக்கிகள் மரணித்திருக்கலாம் ஆனால்மஹ்மூட் அபு டல்பாவிற்கு அவர் எதிர்கொண்டுள்ள துயரம் இன்னமும் முடிவிற்கு வரவில்லை.
யுத்தத்தின் ஆரம்பநாட்கள் முதல் கட்டிடஇடிபாடுகளிற்குள் சிக்குண்டுள்ள தனது மனைவியனதும் ஐந்து பிள்ளைகளினதும் உடல்களை அவர் தேடிவருகின்றார்.
டிசம்பர் 2023 இல் காசாநகரின் செஜய்யா புறநகரில் உள்ள கட்டிடமொன்றில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் அவரது மனைவி பிள்ளைகள் உட்பட 35 பேர் கொல்லப்பட்டனர்.
குண்டுகள் தொடர்ந்து விழுந்துகொண்டிருந்ததால் 3 உடல்கனை மாத்திரம் மீட்க முடிந்தது.
'எனது பிள்ளைகள் இன்னமும் இடிபாடுகளிற்குள்ளேயே இருக்கின்றனர் நான் அவர்களை மீட்க முயல்கின்றனர் சிவில் பாதுகாப்பு படையினர் முயன்றனர்,ஆனால் அழிவு அளவு காரணமாக அவர்களால் மீட்க முடியவில்லை,தியாகிகளின் உடல்களை வெளியே எடுப்பதற்கான சாதனங்கள் எங்களிடம்இல்லை மஹ்மூட் அபு டல்பாவிற எக்ஸ்கவேட்டர்களும் தொழில்நுட்ப சாதனங்களும் அவசியம் என மஹ்மூட் அபு டல்பா தெரிவித்தார்.
'எனது மனைவி ஐந்து பிள்ளைகளுடன் கொல்லப்பட்டார் -மூன்று பெண்கள் இரண்டு ஆண்கள் -மூவர் ஒரே பிரசவத்தில் பிறந்தவர்கள்" என அவர் தெரிவித்தார்.
முஸ்லீம் அராபிய நாடுகளில் உயிரிழந்து ஒரு சிலமணிநேரங்களில் உடல்களை புதைப்பார்கள்,உடல்களை மீட்க முடியாவிட்டால் கௌரவமான விதத்தில் இறுதிக்கிரியைகளை நடத்த முடியாவிட்டால் அது குடும்பங்களிற்கு பெரும் துயரத்தை ஏற்படுத்தும்.
அவர்களை வெளியே கொண்டுவந்து கல்லறையொன்றை ஏற்படுத்த முடியும் என நான் நினைக்கின்றேன்,இந்த உலகத்தில் நான் எதிர்பார்ப்பது அதனைதான்,இந்த உலகம் எனக்கு வீடு கட்டித்தரவேண்டும் என்றோ அல்லது வேறுஎதனையுமோ நான் எதிர்பார்க்கவில்லை,அவர்களை வெளியில் எடுத்து கல்லறையொன்றை உருவாக்கவேண்டும் அவ்வளவுதான் என்கின்றார் அபுடல்பா .
ஹமாசிற்கும் இஸ்ரேலிற்கும் இடையிலான யுத்த நிறுத்தம் நடைமுறைக்கு வந்தது முதல் 200 உடல்களைமீட்டுள்ளதாக பாலஸ்தீன சிவில் அவசரசேவைபிரிவினர் தெரிவித்துள்ளனர்.இந்த யுத்த நிறுத்தம் 45000க்கும் அதிகமானவர்களை பலிகொண்ட 15 மாத யுத்தத்தை நிறுத்தியுள்ளது.
2023 ஒக்டோபர் ஏழாம் திகதி ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலின் தென்பகுதி மீது தாக்குதலை மேற்கொண்டு 1200 பேரை கொலை செய்து 250 பேரை பணயக்கைதிகளாக பிடித்துசென்றதை தொடர்ந்தே இந்த யுத்தம் ஆரம்பமானது.இது இஸ்ரேலின் புள்ளிவிபரமாகும்.94 பணயக்கைதிகள் இன்னமும் ஹமாசின் பிடியிலேயே உள்ளனர்.
கற்குவியல்களை இடிபாடுகளை அகற்றுவதற்கான பாரிய இயந்திரங்கள் இன்மைNயு அவற்றை அகற்றுவதற்கு பெரும் தடையாக உள்ளது என்கின்றார் பாலஸ்தீன சிவில் அவசரசேவை பிரிவின் தலைவர் மஹ்மூட் பாசல்.தங்களின் பல வாகனங்களை இஸ்ரேல் அழித்துள்ளதுடன் 100க்கும் மேற்பட்ட பணியாளர்களை கொலை செய்துள்ளது என அவர் குறிப்பிடுகின்றார்.
கொல்லப்பட்ட பத்தாயிரம் பாலஸ்தீனியர்களின் உடல்கள் இன்னமும் மீட்கப்படாமலிருப்பதாக அவர் மதிப்பிடுகின்றார்.
இஸ்ரேலின் தாக்குதல்கள் காரணமாக 50 மில்லியன் தொன் இடிபாடுகள் காணப்படுவதாக மதிப்பிட்டுள்ள ஐநா,அவற்றை அகற்ற 21 வருடங்கள் எடுக்கும்,1.2 பில்லியன் டொலர்கள் தேவை என தெரிவித்துள்ளது.
அபு டல்பாலை போல காசாவில் 2.3 மில்லியன் சனத்தொகையில் ஆயிரக்கணக்கானவர்கள் பாரிய இடிபாடுகளிற்கு இடையில் சிக்குண்டுள்ள அல்லது இஸ்ரேலின் தரை தாக்குதல்களின் போது பாரியமனித புதைகுழிகளில் புதைக்கப்பட்டுள்ள தங்கள் உறவுகளை தேடிவருகின்றனர்.
68 வயது ரபா அபுலியாஸ் இஸ்ரேலின் தாக்குதலில் தனதுமகனை இழந்தவர்,தனது மகனிற்கு உரிய கல்லறையை வழங்க விரும்புகின்றார்.
அஷ்ரபினை எங்கு புதைத்துள்ளார்கள் என்பது எனக்குதெரியும்,ஆனால் அவரது உடல் ஏனைய பலருரின் உடலுடன் காணப்படுகின்றது,அவருக்கு கல்லறை இல்லை அவரது பெயர் பொறிக்கப்பட்ட கல்லறை இல்லை என்கின்றார் அவர்.
நான்அடிக்கடி அவருடன் பேசுவதற்கு ஏற்ற விதத்தில் அவருக்கு கல்லறையொன்றை உருவாக்க விரும்புகின்றேன் என்கின்றார் அவர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM