இத்தாலி மற்றும் ருமேனியாவில் வேலை பெற்றுத்தருவதாகக் கூறி இளைஞர்களை ஏமாற்றி பல கோடி ரூபா பணத்தை மோசடி செய்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் நேற்று புதன்கிழமை (22) கண்டி, தலத்துஓயா பொலிஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தனது வங்கி கணக்கிலிருந்து பல இலட்சம் ரூபா பணத்தை சந்தேகநபர் மாற்றியுள்ளதாக பாதிக்கப்பட்ட நபரொருவரினால் தலத்துஓயா பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து, பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இதனை அடுத்து சந்தேகநபர் வசித்து வந்த மயிலபிட்டி பிரதேசத்தில் உள்ள வீட்டை சோதனையிட்ட போது 346,480 ரூபா பணம் மற்றும் பல போலி ஆவணங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேகநபர் தொடர்பில் நாடளாவிய ரீதியில் பல பொலிஸ் நிலையங்களுக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM