(நா.தனுஜா)
அடுத்துவரும் மூன்று மாதகாலத்தில் 3 பிரதான செயற்திட்டங்களுக்கென மொத்தமாக 200 மில்லியன் டொலர் நிதியுதவியை இலங்கைக்கு வழங்குவதற்கு உத்தேசித்திருப்பதாக உலக வங்கியின் தெற்காசியப்பிராந்தியத் தலைவர் மார்ட்டின் ரெய்ஸர் தெரிவித்துள்ளார்.
இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று முன்தினம் நாட்டுக்கு வருகைதந்திருந்த உலக வங்கியின் தெற்காசியப்பிராந்திய பிரதித்தலைவர் மார்ட்டின் ரெய்ஸர், இலங்கையில் தங்கியிருந்த இருநாட்களில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, பிரதமர் ஹரினி அமரசூரிய, ஏனைய அரசாங்க உத்தியோகத்தர்கள், தனியார்துறை முதலீட்டாளர்கள், அபிவிருத்திப்பங்காளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும் சந்தித்து, பொருளாதார மீட்சி மற்றும் நீண்கால அடிப்படையிலான பொருளாதார வளர்ச்சி என்பவற்றை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடினார்.
அதன்படி புதிய அரசாங்கத்தின் பிரதிநிதிகளுடனான சந்திப்பு குறித்தும், அவர்களால் முன்னுரிமையளிக்கப்படும் அபிவிருத்தி செயற்திட்டங்கள் பற்றிக் கலந்துரையாடியமை குறித்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கும் மார்ட்டின் ரெய்ஸர், பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்தல் மற்றும் வேலைவாய்ப்பை உருவாக்கல் என்பவற்றுக்கான சாத்தியமான வாய்ப்புகள் தொடர்பில் தனியார்துறையினருடன் நடாத்திய கலந்துரையாடல் குறித்து திருப்தி வெளியிட்டுள்ளார்.
அதேபோன்று இவ்விஜயத்தின்போது வறுமையைத் தணிப்பதற்கான அரசாங்கத்தின் கடப்பாடு, டிஜிட்டல் அபிவிருத்தி மற்றும் 'க்ளீன் ஸ்ரீலங்கா' செயற்திட்டம் என்பன தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்பட்டது. இவற்றுக்கு அவசியமான ஒத்துழைப்பை உலக வங்கி தொடர்ந்து வழங்கும் என உத்தரவாதமளித்த மார்ட்டின் ரெய்ஸர், அடுத்துவரும் மூன்று மாதகாலத்தில் 3 பிரதான செயற்திட்டங்களுக்கென மொத்தமாக 200 மில்லியன் டொலர் நிதியுதவியை வழங்குவதற்கு உலக வங்கி உத்தேசித்திருப்பதாகத் தெரிவித்தார். அதுமாத்திரமன்றி இச்செயற்திட்டங்கள் கிராமிய அபிவிருத்தி மற்றும் கல்வி மேம்பாட்டுக்குப் பெரிதும் உதவும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
மேலும் 'வறுமையைக் குறைத்தல், டிஜிட்டல் நிலைமாற்றம் மற்றும் நிலைபேறான வளர்ச்சி ஆகிய துறைகள் உள்ளடங்கலாக இலங்கையினால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி செயற்திட்டத்துக்கு அவசியமான ஒத்துழைப்பை வழங்குவதற்கு உலக வங்கி தயாராக இருக்கின்றது. எதிர்வருங்காலங்களில் இலங்கை மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு நேரடியாகப் பங்களிப்புச்செய்யக்கூடிய திட்டங்களுக்கு நிதி அளிப்பதற்கு எதிர்பார்த்திருக்கிறோம்' எனவும் உலக வங்கியின் தெற்காசியப்பிராந்தியத் தலைவர் மார்ட்டின் ரெய்ஸர் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM