(எம்.நியூட்டன்)
வட மாகாண திட்டங்களை நடைமுறைப்படுத்தும்போது மாகாண சபையின் அமைச்சுக்கள், திணைக்களங்களையும் நடைமுறைப்படுத்தும் நிறுவனங்களாக உள்ளீர்க்க வேண்டும் என உலக வங்கி பிரதிநிதிகளிடம் ஆளுநர், அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தித் தேவைப்பாடுகள் தொடர்பில் உலக வங்கி பிரதிநிதிகளுக்கும், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் மற்றும் வடக்கு மாகாண பிரதம செயலர் இ.இளங்கோவன் தலைமையிலான வடக்கு மாகாண அதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு நடைபெற்றது. இதன்போதே இவ்விடயம் சுட்டிக்காட்டப்பட்டது.
இந்த சந்திப்பில் வடக்கு மாகாணத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள உலக வங்கியின் நகர அபிவிருத்திக்கான மூத்த விசேட அதிகாரி போஹரம் ஷா தலைமையிலான குழுவினர் வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்கான தேவைப்பாடுகள் தொடர்பில் ஆளுநரிடம் கேட்டறிந்துகொண்டனர்.
வடக்கில் அடையாளம் காணப்பட்டுள்ள திட்டங்களை முன்னெடுப்பதற்கான தேவைப்பாடுகள் தொடர்பில் ஆளுநர், உலக வங்கிப் பிரதிநிதிகளிடம் தெரிவித்தனர்.
இதேவேளை வடக்கு மாகாண பிரதம செயலர் தலைமையிலான அதிகாரிகள் துறைசார் திட்ட முன்மொழிவுகளை உலக வங்கிப் பிரதிநிதிகளிடம் முன்வைத்தனர்.
வடக்கின் பிரதான வீதிகள், பாலங்கள், எரியூட்டிகள், துறைமுகங்கள் உள்ளிட்ட பல்வேறு தேவைப்பாடுகள் தொடர்பிலும் அவற்றை விரைவாக முன்னெடுப்பதன் தேவைப்பாடு தொடர்பாகவும் எடுத்துரைத்துள்ளனர்.
மேலும், திட்டங்களை நடைமுறைப்படுத்தும்போது மாகாண சபையின் அமைச்சுக்கள், திணைக்களங்களையும் நடைமுறைப்படுத்தும் நிறுவனங்களாக உள்ளீர்க்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM