இரத்­தி­ன­பு­ரியில் 77 உயி­ரி­ழப்­புக்கள் : 28 பேரை தொடர்ந்தும் காண­வில்லை

Published By: Priyatharshan

30 May, 2017 | 09:43 AM
image

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை  கார­ண­மாக ஏற்­பட்ட அனர்த்­தங்­க­ளினால் இரத்­தி­ன­புரி மாவட்­டத்­தி­லேயே அதிக உயி­ரி­ழப்­புக்கள் பதி­வா­கி­யுள்­ளன. 

மண்சரிவு, வெள்ளம் கார­ண­மாக இந்த உயி­ரி­ழப்­புக்கள் ஏற்­பட்­டுள்­ள­துடன் நேற்று ஐந்­தா­வது நாளா­கவும் இரத்­தி­ன­புரி மாவட்­டத்தின் பல பகு­திகள் தொடர்ந்தும் நீரில் மூழ்­கி­யி­ருந்­தன.  

இரத்­தி­ன­புரி மாவட்­டத்தில் மட்டும் இது­வரை 77 பேர் மண்சரிவு மற்றும் வெள்­ளத்­துக்கு பலி­யா­கி­யுள்­ள­தா­கவும் மேலும்  26 பேர் காய­ம­டைந்­துள்­ள­தா­கவும் 28 பேர் காணாமல்போயுள்­ள­தா­கவும் இரத்­தி­ன­புரி மாவட்ட செய­லாளர் மாலனி லொக்­கு­போ­த­கம தெரி­வித்தார். 

இந்த எண்­ணிக்­கை­யா­னது மேலும் அதி­க­ரிக்க வாய்ப்­புள்­ள­தா­கவும் கல­வான மற்றும் நிவித்­தி­கல, அய­கம பகு­தி­களில் இருந்து தற்சம­யமே தக­வல்கள் கிடைக்கப் பெற்று வரும் நிலையில் இத்­த­கைய சந்­தேகம் எழுந்­துள்­ள­தா­கவும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.

மழை­யா­னது இரத்­தினபுரி மாவட்­டத்தில் தற்சமயம் ஓய்ந்­துள்ள போதும் இரத்­தி­ன­புரியின் 325 கிராம சேவகர் பிரி­வுகள்  நீரில் மூழ்­கி­யுள்­ளன.

இரத்­தி­ன­பு­ரியின் எல­பாத்த, பெல்­ம­துளை, குரு­விட்ட, எஹ­லி­ய­கொட, கிரி­யெல்ல, இம்­பு­ளுவ, அய­கம, காவத்தை, கல­வான ஆகிய பிர­தேச செய­லக பிரி­வு­க­ளுக்கு உட்­பட்ட அனைத்து தாழ்நிலப் பகு­தி­களும் தொடர்ந்தும் வெள்­ளத்தில் மூழ்­கிய நிலையில் காட்­சி­ய­ளிக்­கின்­றன.  இந் நிலையில் இந்த பகு­தி­களில் நிவா­ரண நட­வ­டிக்­கைகள் முற்று முழு­தாக விமா­னப்­ப­டை­யி­னரின் கட்­டுப்­பாட்டில் இடம்­பெற்று வரு­கின்­றன.

குறிப்­பாக கல­வான வைத்­தி­ய­சாலை பகு­தியும் அதனை அண்­மித்த கிரா­மங்­க­ளையும் அய­கம பகு­தி­யையும் கடற்­ப­டை­யினர் பட­குகள் ஊடாக நெருங்­கு­வது சிக்­கலை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. இந் நிலையில் விமா­னப்­ப­டை­யினர் இப்­ப­கு­தி­களில் மீட்பு மற்றும் நிவா­ரணப் பணி­களில் ஈடு­பட்­டுள்­ளனர்.

குறிப்­பாக விமா­னப்­ப­டையின் எம்.ஐ. 17 ஹெலி­கொப்­டர்கள் 4, பெல் 212 ஹெலி­கொப்டர் ஒன்று, பெல் 412 ஹெலி­கொப்டர் ஒன்று ஆகி­யன இப்­ப­கு­தியில்  அனர்த்த மீட்பு, நிவா­ரணப் பணி­களில் ஈடு­பட்­டுள்­ளன.  

இரத்­தி­ன­புரி மாவட்­டத்தில் மட்டும்  இயற்­கையின் சீற்­றத்தால் 29345 குடும்­பங்­களைச் சேர்ந்த 112928 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக குறிப்­பிட்ட இரத்­தி­ன­புரி மாவட்ட செய­லாளர் மாலனி, அவர்­களில் 8997 குடும்­பங்­களைச் சேர்ந்த 38323 பேர் 169 முகாம்­களில் தங்­க­வைக்­கப்­பட்­டுள்­ள­தாக தெரி­வித்தார். இத­னை­விட இரத்­தி­ன­புரி மாவட்­டத்தில் வெள்ளம், மண்சரிவு கார­ண­மாக 79 வீடுகள் முற்­றா­கவும் 1140 வீடுகள் பகு­தி­ய­ள­விலும் சேதமடைந்­துள்­ளமை தொடர்பில் தற்­போ­தைக்கு தனக்கு தகவல் கிடைத்­துள்­ள­தா­கவும் அவர் தெரி­வித்தார். வெள்ளம் தொடரும் நிலையில் அந்த எண்­ணிக்­கையில் மாற்றம் ஏற்­ப­டலாம் எனவும் பாதிக்­கப்­பட்­டோ­ருக்கு தேவை­யான உத­வி­களை வழங்க அனைத்து நட­வ­டிக்­கை­க­ளையும் அனர்த்த முகா­மைத்­துவ அமைச்­சுடன் இணைந்து முன்­னெ­டுத்­துள்­ள­தா­கவும் அவர் தெரி­வித்தார்.

இத­னி­டையே இரத்­தி­ன­புரி மாவட்­டத் தின் 10 பொலிஸ் பிரி­வுகளுக்குட்­பட்ட வீதிகள் வெள்ளம் கார­ண­மாக போக்குவரத்து

செய்ய முடி­யாத நிலைக்கு தள்­ளப்­பட்­டுள்­ளன. இதனால் குறித்த வீதிகள் ஊடாக பய­ணிக்க வேண்டாம் என பொலிஸார் பொது­மக்­களை கோரி­யுள்­ளனர்.

குறிப்­பாக இரத்­தி­ன­புரி பொலிஸ் பிரி­வுக்குட்­பட்ட இரத்­தி­ன­புரி –- கல­வானஇ இரத்­தி­ன­புரி –- பாணந்­துறைஇ இரத்­தி­ன­புரி பலா­வெல ஆகிய வீதிகள் முற்றாக நீரில் மூழ்­கி­யுள்­ளன. அதனால் அந்த வீதி­க­ளி­னூ­டான போக்குவரத்து முற்­றாக ஸ்தம்­பி­த­ம­டைந்­துள்­ளது.

குரு­விட்ட பொலிஸ் பிரிவின் குரு­விட்ட - கொரக எல்ல இரு வீதி­களும் முற்­றாக நீரில் மூழ்­கி­யுள்­ளன.கல­வான பொலிஸ் பிரிவில் கல­வான -– பொத்­து­பிட்டி, கல­வான -– மத்­து­கம ஆகிய வீதிகளும் நீரில் மூழ்­கி­யுள்­ளன.

எஹ­லி­ய­கொட பொலிஸ் பிரிவில் எஹ­லி­ய­கொட -– எல்­லா­வல வீதி நீரில் மூழ்­கி­யுள்­ளது. இறக்­வா­னையில் பொத்துபிட்டி வீதியின் ஊடான போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது.

இதனைவிட அயகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அயகம –- கவகிரி வீதியும் வேவல்வத்த பொலிஸ் பிரிவின் வேவல்வத்த - இரத்தினபுரி வீதியும் கொலன்ன பொலிஸ் பிரிவின் கொலன்ன - – தெனியாய வீதியும் நிவித்திகல பொலிஸ் பிரிவின் நிவித்திகல - கலவான வீதியும்  கிரிஎல்ல பொலிஸ் பிரிவில் கிரிஎல்ல– - பாணந்துறை வீதியும் முற்றாக நீரில் மூழ்கியுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51