தமது மனை­வியின் அக்­காவின் மக­ளான நாலரை வயது சிறு­மியை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய 38 வய­து­டைய பெரி­யப்­பாவை எதிர்­வரும் 26 ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு மட்­டக்­க­ளப்பு நீதிவான் நீதி­மன்ற நீதி­பதி எம்.கணே­ச­ராசா உத்­த­ர­விட்­டுள்ளார்.

ஆரை­யம்­பதி அம­ர­சிங்க வீதியைச் சேர்ந்த 38 வய­து­டைய குடும்­பஸ்­தர் ஒருவருக்கே இவ்­வாறு விளக்­க­ம­றியல் உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ளது. தனது மனை­வியின் சகோ­தரி வைத்­தி­ய­சா­லையில் தாதி­யாக பணி­பு­ரி­பவர். அவ­ரது நான்­கரை வயது மகளை தங்­கை­யிடம் ஒப்­ப­டைத்­து­விட்டே தினமும் கட­மைக்கும் செல்­வ­துண்டு. இந்த சந்­தர்ப்­பத்தில் குறித்த சிறு­மியை தொடர்ந்தும் இச் சந்­தேக நபர் துஷ்­பி­ர­யோ­கத்­திற்­குட்­படுத்தி வந்­துள்­ள­தாக பொலிஸார் தெரி­விக்­கின்­றனர். சிறுமி தனக்கு சிறுநீர் கழிக்க முடி­ய­வில்­லை­யென அழு­த­போதே வைத்­தி­ய­சா­லைக்கு எடுத்துச் சென்­றுள்­ளனர். பின்னர் துஷ்­பி­ர­யோ­கத்­திற்­குள்­ளா­னது வெ ளிச்­சத்­திற்கு வந்துள்ளதாக தெரியவந்தது. காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.பீ.வெதகெதர தலைமையி லான பொலிஸார் விசாரணை களை மேற்கொண்டுள்ளனர்.