(நா.தனுஜா)
அம்பாந்தோட்டை எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய அபிவிருத்தி செயற்திட்டத்துடன் தொடர்புடைய சகல விடயங்களும் எதிர்வரும் ஒருமாதகாலத்தினுள் தீர்மானிக்கப்படும் என அறிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத், இச்செயற்திட்டத்தினால் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு எவ்வித அச்சுறுத்தலும் ஏற்படாது என உத்தரவாமளித்துள்ளார்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அண்மைய சீன விஜயத்தின்போது ஆராயப்பட்ட விடயங்கள் மற்றும் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தங்கள் குறித்துத் தெளிவுபடுத்தும் நோக்கிலான ஊடகவியலாளர் சந்திப்பொன்று புதன்கிழமை (22) கொழும்பிலுள்ள அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அங்கு ஜனாதிபதியின் சீன விஜயத்தின்போது இருதரப்பினருக்கும் இடையில் எட்டப்பட்ட இணக்கப்பாடுகள் குறித்துக் கருத்து வெளியிட்ட அமைச்சர் விஜித்த ஹேரத், குறிப்பாக அம்பாந்தோட்டை எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய நிர்மாணம் தொடர்பில் இருதரப்பு இணக்கப்பாடு எட்டப்பட்டிருப்பதாக சுட்டிக்காட்டினார்.
இச்செயற்திட்டத்தை முன்னெடுப்பதற்கு 3.7 பில்லியன் டொலர் நிதியை முதலீடு செய்வது குறித்து சீன பெற்றோலியம் மற்றும் இரசாயனக் கூட்டுத்தாபனத்துடன் (சினோபெக்) ஏற்கனவே இணக்கப்பாடு எட்டப்பட்டிருக்கும் நிலையில், இச்செயற்திட்டத்துடன் தொடர்புடைய நிபந்தனைகள், வழிகாட்டல்கள், ஏனைய வசதிகள், இத்திட்டத்தின் மூலம் இலங்கையினால் விநியோகிக்கப்படக்கூடிய எரிபொருளின் அளவு உள்ளிட்ட விடயங்கள் குறித்து எதிர்வரும் ஒரு மாதகாலத்துக்குள் தீர்மானிப்பதற்கு ஜனாதிபதியின் சீன விஜயத்தின்போது இணக்கம் காணப்பட்டதாக வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்தார்.
அத்தோடு இந்த அபிவிருத்திச் செயற்திட்டத்தின் ஊடாக மசகு எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டு, அது அம்பாந்தோட்டை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் ஊடாக சுத்திகரிக்கப்பட்டு, மீண்டும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் என விளக்கமளித்த அவர், இவ்வாறான செயற்திட்டங்கள் சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் முன்னெடுக்கப்படுவதாகக் குறிப்பிட்டார்.
மேலும் இச்செயற்திட்டம் தொடர்பான இறுதி ஒப்பந்தத்தில் அவசியமான சகல மட்டுப்பாடுகள் மற்றும் வழிகாட்டல்கள் உள்ளடக்கப்படும் என்பதனால், இதனால் தேசிய பாதுகாப்புக்கு எவ்வித அச்சுறுத்தலும் ஏற்படாது என உத்தரவாதமளித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM