( எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)
2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அரச சேவையாளர்களின் சம்பளத்தை அதிகரித்தால் பெருந்தோட்ட மக்களின் சம்பளத்தையும் அதிகரிக்க வேண்டும். ஏனெனில் எமது மக்கள் இன்றும் பல நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளார்கள்.
தினசரி சம்பளத்தை 2000 ரூபாவாக அதிகரிக்க வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (22) நடைபெற்ற கிளின் ஸ்ரீ லங்கா செயற்திட்டம் மீதான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது,
பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற அமர்வில் பிரதமர் ஹரிணி அமரசூரிய உரையாற்றுகையில் பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் குறிப்பிட்ட விடயங்களுக்கு பதிலளித்துக் கொண்டிருந்தார்.
அப்போது சபைக்கு தலைமை தாங்கியவரின் அனுமதியுடன், நான் பிரதமரை நோக்கி கடந்த கால அரசாங்கத்தை போல் இல்லாமல் கிளின் ஸ்ரீ லங்கா செயற்திட்டத்தின் எண்ணக்கருவை எடுத்துரைக்குமாறு குறிப்பிட்டேன்.
இதற்கு பிரதமர் ' பாராளுமன்றத்தில் எவ்வாறு உரையாற்ற வேண்டும் என்று எனக்கு கற்பிக்க வேண்டாம் என்று ஆவேசமாக குறிப்பிட்டார்' பிரதமர் வழங்கிய பதில் முறையற்றது. பிரதமருக்கு கற்பிக்க வேண்டிய அவசியம் எனக்கு கிடையாது. அதற்கான நேரமும் எனக்கில்லை'
எதிர்க்கட்சியினரின் செயற்பாடுகள் கவலைக்குரியது என்று பிரதமர் குறிப்பிட்டார். உண்மையில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் எமக்கும் கவலை தான் அளிக்கிறது. பிரதமரின் கோபம் மற்றும் ஆத்திரத்தை எம்மால் விளங்கிக் கொள்ள முடியும்.
கிளின் ஸ்ரீ லங்கா செயற்திட்டம் மற்றும் அதன் எண்ணக்கரு சிறந்தது . சிங்கப்பூர் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் இந்த திட்டம் காணப்படுகிறது . ஆகவே சிறந்த திட்டங்களுக்க நாங்கள் என்றும் ஆதரவு வழங்குவோம்.
பெருந்தோட்ட மக்களையே நான் என்றும் பிரதிநிதித்துவப்படுத்துகிறேன். எமது மக்கள் பல பிரச்சினைகளுக்கும், உரிமை மறுப்புக்கும் இன்றும் முகங்கொடுத்துள்ளார்கள்.
கடந்த பாராளுமன்ற அமர்வின் போது பெருந்தோட்ட மக்களின் நாற்சம்பளம் 2000 ரூபாவாக அதிகரிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டேன். இதற்கு ஆளும் தரப்பின் உறுப்பினர்கள் அவசர பட வேண்டாம் என்று குறிப்பிட்டுள்ளதை அவதானிக்க முடிந்தது.
2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அரச சேவையாளர்களின் சம்பளத்தை அதிகரித்தால் பெருந்தோட்ட மக்களின் சம்பளத்தையும் அதிகரிக்க வேண்டும். ஏனெனில் எமது மக்கள் இன்றும் பல நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளார்கள்.
அரசியல் கைதிகள் என்று எவரும் இல்லை என்று ஆயுத போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் விடுதலை முன்னணியின் பிரதி கட்சியான தேசிய மக்கள் சக்தி குறிப்பிட்டுள்ளமை கவலைக்குரியது.
நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்திலும் எமது அமைச்சரவையில் இருந்தவர்களும் இவ்வாறான கருத்தையே குறிப்பிட்டார்கள்.அதற்கு எதிராக நாங்கள் போராடி பல அரசியல் கைதிகளை விடுதலை செய்தோம்.
பல ஆண்டுகளாக தமிழ் அரசியல் கைதிகள் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். அவர்களை விடுலை செய்ய வேண்டும். அதுதான் தூய்மையான ஸ்ரீ லங்கா திட்டம் என்ற இலக்கை முழுமைப்படுத்தும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM