(நா.தனுஜா)
அண்மையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் சீன விஜயத்தை அடுத்து, சீனாவினால் 500 மில்லியன் யுவான் (20 பில்லியன் இலங்கை ரூபா) நிதி நன்கொடையாக வழங்கப்பட்டதாகவும், அந்நிதி எதிர்வருங்காலங்களில் நாட்டுமக்களின் நலனுக்காகப் பயன்படுத்தப்படும் எனவும் வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அண்மைய சீன விஜயத்தின்போது ஆராயப்பட்ட விடயங்கள் மற்றும் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தங்கள் குறித்துத் தெளிவுபடுத்தும் நோக்கிலான ஊடகவியலாளர் சந்திப்பொன்று புதன்கிழமை (22) கொழும்பிலுள்ள அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அங்கு கருத்து வெளியிட்ட வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத், சீன ஜனாதிபதி சி ஜின்பிங் மற்றும் அந்நாட்டுப் பிரதமர் உள்ளடங்கலாக உயர்மட்டப்பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற சந்திப்புக்களின்போது கொழும்புத்துறைமுகம், அம்பாந்தோட்டை துறைமுகம், மத்திய அதிவேக நெடுஞ்சாலை உள்ளிட்ட அபிவிருத்தி செயற்திட்டங்கள் குறித்துக் கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவித்தார்.
அதேபோன்று இவ்விஜயத்தின்போது சீன அரசாங்கத்தினால் நன்கொடையாக வழங்கப்பட்ட 500 மில்லியன் யுவான் (20 பில்லியன் இலங்கை ரூபா) நிதி தமக்குக் கிடைக்கப்பெற்ற பெருவெற்றி எனவும், எதிர்வருங்காலங்களில் அந்நிதி நாட்டுமக்களின் நலனுக்காகப் பயன்படுத்தப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அதேவேளை கொழும்பு துறைமுகநகர அபிவிருத்திச் செயற்திட்டத்தின் ஓரங்கமாக, கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தை விடவும் விசாலமான மாநாட்டு மண்டபமொன்றை சீன நிதியுதவியுடன் கொழும்பு துறைமுகநகரத்தில் நிர்மாணிப்பதற்கான இருதரப்பு இணக்கப்பாடு எட்டப்பட்டதாகவும், அதனை முன்னிறுத்திய அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் எதிர்வருங்காலங்களில் கலந்துரையாடித் தீர்மானிக்கப்படும் என்றும் விஜித்த ஹேரத் குறிப்பிட்டார்.
மேலும் இலங்கையின் தெரிவுசெய்யப்பட்ட சில அரச ஊடக நிறுவனங்களுக்கும், சீனாவின் சின்ஹுவா செய்திச்சேவை நிறுவனத்துக்கும் இடையில் எட்டப்பட்ட இணக்கப்பாட்டின் பிரகாரம், எதிர்வருங்காலங்களில் ஊடகவியலாளர்களுக்கான பயிற்சி வழங்கல் மற்றும் ஊடகத்துறையை மேம்படுத்துவதற்கு அவசியமான ஒத்துழைப்புக்கள் என்பவற்றைப் பெற்றுக்கொள்ளமுடியும் எனவும் வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM