நீர்கொழும்பு சிறைச்சாலையிலிருந்து 4 கைதிகள் தப்பியோடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நான்கு கைதிகளும் நேற்று இரவு 11 மணிக்கும் 12 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் தப்பியோடியுள்ளதாக சிறைச்சாலையின் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

நீர்கொழும்பு சிறைச்சாலையின் மதிலில் துளையிட்டு நான்கு கைதிகளும் தப்பிச் சென்றுள்ளனர்.

இவ்வாறு தப்பிச்சென்ற கைதிகளை மீண்டும் கைதுசெய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.