தொழில்நுட்ப, வணிக ஆலோசனை சேவைகளில் உலகளாவிய முன்னணி நிறுவனமான ஹெக்ஸாவேர் டெக்னாலஜியுடன், இலங்கை மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்களின் சங்கம் கூட்டாண்மை ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது.
இந்த ஒத்துழைப்பு ஒப்பந்தம் இலங்கையின் தொழில்நுட்பத் துறைக்கு ஒரு புதிய அத்தியாயத்தை ஏற்படுத்துடன், இது வளர்ந்து வரும் உலகளாவிய தொழில்நுட்ப மையமாக நாட்டின் நிலையை மேலும் உறுதிப்படுத்தும்.
இலங்கையில் தொழில்நுட்ப அறிவு மற்றும் புதுமைத் துறைக்கான தேசிய சபையாக, இலங்கை மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்களின் சங்கம் செயல்படுகிறது.
இலங்கையை தொழில்நுட்ப செயல்திறன் மறறும் திறமைக்கான முன்னணி இடமாக மாற்றுவதற்கான அதன் நோக்கத்தில் அறிவுப் பகிர்வு, திறன் மேம்பாடு மற்றும் தொழில்துறை தலைமைத்துவத்தை ஊக்குவிக்கும் முன்முயற்சிகளில் முழு அளவில் ஈடுப்படுகிறது.
எனவே, இலங்கை மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்களின் சங்கம், ஹெக்ஸாவேர் டெக்னாலஜிஸ் போன்ற மூலோபாய கூட்டாண்மைகள் நாட்டில் சிறந்த மாற்றத்திற்கு வழிவகுக்கும்.
உலகளாவிய அரங்கில் இலங்கை தகவல் தொழிழல்நுட்ப துறையின் ஒட்டுமொத்த போட்டித்தன்மையை மேம்படுத்துவதற்கு இந்த கூட்டாண்மை பெரும் பங்களிப்பை செய்கிறது.
இந்த மூலோபாய கூட்டாண்மைகள் மூலம், இலங்கை மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்களின் சங்கம் அடுத்த தலைமுறை நிபுணர்களை சித்தப்படுத்துவதன் மூலமும், பல்வேறு தொழில்நுட்ப வல்லுநர்களை மேம்படுத்துவதன் மூலமும், அதிநவீன தொழில்நுட்பங்களை ஆதரிக்கும் ஒரு சுற்றுச்சூழல் அமைப்பை வளர்ப்பதன் மூலமும், இலங்கையின் தகவல் தொழில் நுட்ப துறையை உயர்த்த உதவுவதன் மூலமும், பிராந்தியத்திலும் அதற்கு அப்பாலும் புதுமை, திறமை மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கான முன்னணி மையமாக நிலைநிறுத்த முடியும்.
இலங்கை மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்களின் சங்கம் தலைவர் நிஷான் மெண்டிஸ் இந்த ஒத்துழைப்புக்கான தனது உற்சாகத்தை வெளிப்படுத்தினார்.
இலங்கையின் தொழில்நுட்பத் துறையின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் ஒரு மூலோபாய பங்காளியாக ஹெக்ஸாவேர் டெக்னாலஜியை வரவேற்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.
டிஜிட்டல் மாற்றம், ஆட்டோமேஷன் மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகியவற்றில் ஹெக்ஸாவேரின் உலகளாவிய தலைமை, எங்கள் நோக்கத்துடன் முழுமையாக ஒத்துப்போகிறது.
இந்த கூட்டாண்மை இலங்கையை தகவல் தொழில்நுட்ப திறமை மற்றும் புதுமைக்கான உலகளாவிய மையமாக மாற்றுவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க படியாகும் என தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM