அட்டன் கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலைகளில் கடந்த காலங்களில் இடம்பெற்ற மோசடியான சம்பவங்களே தற்போதும் இடம்பெற்று வருவதாக அட்டன் கல்வி வலயத்தின் ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பு விசனம் வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் குறித்த அமைப்பு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
இடமாற்ற சபைகளின் தலையீடின்றி தன்னிச்சையாக இடம்பெற்று வரும் ஆசிரியர் இடமாற்றங்கள் குறித்து எமது உறுப்பினர்கள் முறைப்பாடுகளை முன்வைத்தனர்.
இதையடுத்து தொழிற்சங்க அமைப்புகள் கடந்த 20ஆம் திகதி திங்கட்கிழமை அட்டன் வலயக் கல்விப் பணிப்பாளரை சந்தித்தன.
இதன்போது இடமாற்ற சபை இல்லாமல் ஆசிரிய இடமாற்றங்களை செய்ய வேண்டாம் என்றும் இடம்பெற்ற ஆசிரிய இடமாற்றங்களை நிறுத்தி வைக்குமாறும் பணிப்பாளரிடம் உறுப்பினர்கள் கோரிக்கை முன்வைத்தனர்.
இடமாற்றங்கள் தொடர்பில் இடம்பெறும் மோசடிகளை தடுப்பதற்கு மேற்படி தொழிற்சங்க கூட்டமைப்பு உறுப்பினர்கள் ஒன்பது அம்ச கோரிக்கை ஒன்றையும் வலயக் கல்வி பணிப்பாளரிடம் கையளித்தனர்.
இடமாற்றங்கள் எவ்வாறு இடம்பெற வேண்டும் என்பதை அறிந்திருந்தும் இடமாற்ற சபையின்றி இந்த செயற்பாடுகள் இடம்பெற வலயக் கல்வி பணிப்பாளர் எவ்வாறு அனுமதியளித்தார் என்பது குறித்தும் அங்கு கேள்விகள் எழுப்பப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM