எம்மில் சிலருக்கு நாளாந்த வாழ்வே கடினமானதாக இருக்கும். காலையில் எழுந்ததிலிருந்து இரவு உறங்கும் வரை சொல்லொணா துயரை சந்தித்திருப்போம். இறுதியில் அன்றைய தினம் உழைத்த உழைப்பிற்கு ஏற்ற பலன் கிடைக்காததால் மனம் வெதும்பி, உழைப்பை சுரண்டியவர்கள் மீது கோபமாக திரும்பும்.
வேறு சிலருக்கு கடினமாக உழைத்தாலும் புத்திசாலித்தனமாக உழைத்தாலும் சாமர்த்தியமாக செயல்பட்டாலும் சாதுரியமான அணுகுமுறையை மேற்கொண்டாலும் வெற்றி என்பது கிட்டவே கிட்டாது. இவர்கள் அனைவருக்கும் கடந்த பிறவியில் செய்த கர்ம வினையின் காரணமாக இந்த பிறவியில் வெற்றியை ருசிக்க முடியாமல் தவிக்கிறார்கள்.
இதை எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் கடந்த ஜென்மங்களில் பாவம் செய்தவர்கள் கடந்த பிறவியில் மட்டுமல்ல இதற்கு முன்னரான பிறவியிலும் பாவம் செய்திருந்தால் தான் இந்த பிறவியில் தொடர் தோல்விகளை சந்திக்க முடியும் என குறிப்பிடுகிறார்கள்.
மேலும் தொடர் தோல்விகளை சந்திப்பவர்கள் வெற்றி பெற வேண்டும் என்றாலும் கடந்த ஏழேழு பிறவிகளில் செய்த பாவங்கள் இந்த பிறவியில் தொலைக்க வேண்டும் என்றால் ..எளிய பரிகாரத்தின் மூலம் இதனை அதனை நிறைவேற்றலாம்.
இதற்கு தேவையான பொருட்கள்: கைப்பிடி பச்சரிசி, கைப்பிடி அளவிற்கு உலர் திராட்சை.
கைப்பிடி பச்சரிசியை எடுத்துக்கொண்டு நன்றாக இடித்து பொடி செய்து வைத்துக் கொள்ளுங்கள். சனிக்கிழமையில் காலை ஆறு மணி முதல் ஏழு மணி வரையிலான சனி ஹோரையில் வீட்டை விட்டு வெளியில் வந்து கிழக்கு திசை நோக்கி சூரிய நமஸ்காரம் செய்துவிட்டு பிறகு அருகில் இருக்கும் அரச மரத்தடி விநாயகர் ஆலயத்திற்கு செல்ல வேண்டும். அந்த விநாயகப் பெருமானை மூன்று முறை வலம் வர வேண்டும்.
வலம் வரும்போது உங்களுடைய கைப்பிடியில் இருக்கும் பச்சரிசி பொடியை சிறிது சிறிதாக தூவிக்கொண்டே வாருங்கள். உங்கள் கையில் இருக்கும் கைப்பிடி பச்சரிசி மாவு மூன்று சுற்றுக்குள் தீர்ந்துவிடும். அதன் பிறகு விநாயகரிடம், 'கடந்த பிறவியில் செய்த பாவங்கள் தொலைய வேண்டும்.
இப்பிறவியில் எமக்கான நற்பலன்களை பெறுவதற்கு அருள வேண்டும்' என பிரார்த்திக்க வேண்டும். உங்களுடைய அரிசி மாவினை அந்த ஆலயத்தை சுற்றியுள்ள எறும்புகள் எந்த அளவிற்கு உணவாக எடுத்துக் கொள்கிறதோ அந்த அளவிற்கு உங்களுடைய பாவங்கள் படிப்படியாக குறைந்து விடும். இதனை தொடர்ச்சியாக எட்டு சனிக் கிழமைகள் வரை மேற்கொண்டால் உங்களுடைய கடந்த பிறவி பாவங்கள் தொலைந்து இந்த பிறவியில் உங்களுக்கான நற்பலன்கள் கிடைக்கும்.
உடனே எம்மில் சிலர் எட்டு வாரம் அல்ல அதற்கு மேலும் நான் தொடர்ச்சியாக பச்சரிசி மாவு பரிகாரத்தை மேற்கொண்டு இருக்கிறேன். ஆனால் வெற்றி மற்றும் கிடைத்தபாடில்லை என புலம்புவர். இவர்கள் சனிக்கிழமையில் காலையில் எழுந்ததும் கைப்பிடி அளவிற்கு உலர் திராட்சையை எடுத்து காகத்திற்கு உணவாக இட வேண்டும்.
அந்த உலர் திராட்சையை காகம் எடுத்து செல்லத் தொடங்கினால் உங்களுடைய பாவங்கள் குறைய தொடங்குகிறது என பொருள்.
இதனையும் தொடர்ச்சியாக 48 நாட்கள் அல்லது எட்டு சனிக்கிழமைகளில் இதனை காலையில் சனி ஹோரையில் மேற்கொள்ளும்போது உங்களுக்கான பாவ கணக்கு குறைந்து, புண்ணிய கணக்கு அதிகரித்து, இந்த பிறவியில் நீங்கள் பெறவேண்டிய நற்பலன்கள் அதிவிரைவாக கிடைக்கும்.
தொகுப்பு : சுபயோக தாசன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM