இன்றைய சூழலில் எம்முடைய இளைய தலைமுறையினர் தங்களுடைய வாழ்க்கை நடைமுறையை மாற்றி அமைத்துக் கொண்டதால், விவரிக்க இயலாத பல காரணங்களால் சுகவீனத்தை எதிர்கொள்கிறார்கள்.
பெரும்பாலும் வைரல் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்ட பிறகு, அதற்காக சிகிச்சை பெறுவார்கள் ஒரு வாரம் காலம் அல்லது பத்து நாட்கள். பத்து நாட்கள் வரை சிகிச்சை பெற்ற பிறகு அதிலிருந்து நிவாரணம் அடைவார்கள். இந்த தருணத்திலிருந்து மூன்று வாரங்கள் வரை அவர்களுடைய மூட்டு பகுதிகளில் விவரிக்க இயலாத அல்லது தாங்க இயலாத வகையில் வலி உண்டாகும். இதனை மருத்துவ மொழியில் போஸ்ட் வைரல் ஓர்தரைட்டிஸ் என குறிப்பிடுகிறார்கள்.
இருபது நாட்களுக்குப் பிறகு தானாக குணமடையும் என்றாலும் வலியுடன் இருபது நாட்களை கடப்பது என்பது தற்போதைய சூழலில் சவாலானது என்பதால் வலிக்கான அறிகுறி தெரிந்தவுடன் அருகில் இருக்கும் வைத்தியசாலைக்குச் சென்று வைத்தியரை சந்தித்து ஆலோசனையும், சிகிச்சையும் பெற வேண்டும் என வைத்தியர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
பொதுவாக வைரல் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று குணமடைவார்கள். அதன் பிறகு அவர்கள் இயல்பு நிலை திரும்புவதற்கு சில வார காலம் ஆகலாம். இந்த தருணத்தில் உடம்பில் உள்ள வைரஸ்கள் காரணமாக கை, கால், இடுப்பு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மூட்டுகளில் வலி உண்டாகும். இத்தகைய பாதிப்பை சிலர் தாங்கிக் கொண்டாலும் இன்றைய வேகமான காலகட்டத்தில் மூன்று வார காலங்கள் பொறுத்திருக்க இயலாது.
இதனால் மூட்டுகளில் வலி உண்டான பிறகு குறிப்பாக காய்ச்சல் குணமான பிறகு மூட்டுகளில் வலி ஏற்பட்டால் இதற்கு உடனடியாக சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.
இந்தத் தருணத்தில் வைத்தியர்கள் யூரிக் அமில பரிசோதனை, - ஆர் ஏ ஃபேக்டர் பரிசோதனை - குருதி பரிசோதனை- ஆகிய பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என பரிந்துரைப்பார்கள்.
இந்த பரிசோதனையின் முடிவில் பாதிப்பின் தன்மையை துல்லியமாக அவதானித்து, நவீன மருத்துவ தொழில் நுட்பங்களால் கண்டறியப்பட்ட பிரத்யேக மருந்துகள் சிகிச்சை மூலம் இதற்கு முழுமையான நிவாரணத்தை வழங்குவார்கள். இதன் மூலம் காய்ச்சலுக்கு பிறகு உங்களுடைய வலியில்லா வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் நடத்தலாம்.
வைத்தியர் பாலசுப்ரமணியன்
தொகுப்பு அனுஷா.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM