கொலன்னாவை வீட்டுத்திட்டத்தில் எஞ்சியிருக்கும் வீடுகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை - அமைச்சர் அருண கருணாதிலக்க

Published By: Digital Desk 7

22 Jan, 2025 | 05:10 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

சட்டவிராேத குடியிருப்புகள் என நீதிமன்றத்தினால் அளிக்கப்பபட்ட தீர்ப்பின் பிரகாரமே கொலன்னாவை பகுதியில் சில வீடுகள் அகற்றப்படுள்ளன. என்றாலும் அந்த மக்களின் தேவைப்பாடுகளை கருத்திற்கொண்டு அவர்களுக்கு வீட்டுத்திட்டத்தில் எஞ்சியிருக்கும் வீடுகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்போம் என வீடமைப்பு, நகர அபிவிருத்தி அமைச்சர் அருண கருணாதிலக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (22) வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது மரிக்கார் எம்.பி. எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இதுதொடர்பில் அவர் தொடர்ந்து பதிலளிக்கையில்,

கொலன்னாவை 101ஆம் தோட்டத்தில் சட்டவிராேதமாக கட்டப்பட்டிருந்த வீடுகள் சில உடைக்கப்பட்டுள்ளன. இந்த பகுதியில் குடியிருந்தவர்களின் வீட்டுக்கோரிக்கை பரிசீலிக்கப்பட்டபோது 140 பேரின் வீட்டு்க்கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு அவர்களுக்கு 2018ஆம் ஆண்டு வீடுகள் வழங்கப்பட்டுள்ளன.

20 பேரின் கோரிக்கை பல்வேறு காரணங்களால் நிராகரிக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் இதுதொடர்பில் மேன்முறையீடு செய்திருந்தனர். அந்த மேன்முறையீடுகளை, மேன்முறையீட்டு குழு ஆராய்ந்து பார்த்து, சில பரிந்துரைகளையும் யோசனைகளையும் முன்வைத்திருந்தன.

அதன் பிரகாரம்  அனைத்து தகுதிகளையும் பூர்த்திசெய்துள்ளவர்களின் கோரிக்கையை ஆராந்துபார்த்து, தாய் மற்றும் பிள்ளையின் பெயருக்கு ஒரு வீடு வழங்குவதற்கு மேன்முறையீட்டு குழு தீர்மானித்துள்ளபோதும் வீட்டு அலகு இரண்டு பெற்றுக்கொண்டு. தொடர்ந்தும் அந்த இடத்தில் தங்கி இருத்தல், இதுபோன்ற பல விடயங்கள் அறிக்கையிடப்பட்டிருந்தன.

இன்றாலும் இந்த குடுபங்களில் ஒன்று, இரண்டு உப குடும்பங்கள் இருந்துள்ளதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். ஒரு வீட்டில் பல குடும்பங்கள் இருந்தாலும் ஒரு  குடும்பத்துக்கே  குறித்த வீட்டு வேலைத்திட்டம் மூலம் ஒரு வீடே கிடைக்கப்பெறுகிறது.

அதன் பிரகாரம் இந்த 101ஆம் தோட்டத்தில் இருப்பவர்களில் அதிகமானவர்களின் வீட்டுக்கோரிக்கை விண்ணப்பத்தில் அவர்களின் பதிவை உறுதிப்படுத்த போதுமான ஆவணங்களை சமர்ப்பிக்க தவறி இருக்கின்றமை, அவர்களுடன் இருக்கும் குடும்பங்கள் தொடர்பில் சரியான தகவல் வழங்காமை போன்ற காரணங்களால், குறித்த 20பேருக்கு அந்த வீட்டுத்திட்டம் ஊடாக வீடு வழங்க முடியாது என 2023இல் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.

என்றாலும் இவர்கள் தொடர்பில் மனித நேயத்துடன் பார்த்து, வீட்டுத்திட்டங்களில் வீடுகள் சில மீதம் இருப்பதாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது தெரியவந்திருக்கிறது. அவர்களின் சட்ட நிலைமையை பார்த்து, முன்னிலையின் அடிப்படையிலும் எஞ்சியிருக்கும் வீடுகளின் நிலையின் பிரகாரமும் வீடுகளை பெற்றுக்கொடுக்க எங்களுக்கு முடியும். அது தொடர்பில் எதிர்காலத்தில் நடவடிக்கை எடுப்போம்.

அதேநேரம் இவர்களின் வீடுகளை அங்கிருந்து அகற்றும் நடவடிக்கை நகர அபிவிருத்தி அதிகாரசபையின் தீர்மானத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஒன்று அல்ல. இதுதொடர்பில் வழங்கொன்று தொடுக்கப்பட்டிருந்தது. அந்த வழக்கின் தீர்ப்பின் பிரகாரமே, சட்டவிராேத குடியிருப்பாளர்களை அங்கிருந்து அகற்ற நகர அபிவிருத்தி அதிகாரசபை நடவடிக்கை எடுத்திருந்தது. என்றாலும் பாதிக்கப்பட்டிருக்கும் அந்த மக்களின் தேவைப்பாட்டை கருத்திற்கொண்டு, வீடமைப்பு அமைச்சு மற்றும் நகர அபிவிருத்தி அதிகாரசபையும் இணைந்து நடவடிக்கை எடுப்போம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டிக்கோயா சந்தியில் பஸ் - முச்சக்கரவண்டி...

2025-02-09 10:58:35
news-image

கிண்ணியாவில் காட்டு யானைகளின் அட்டகாசத்தால் வீடு,...

2025-02-09 10:35:23
news-image

32,000 கஞ்சா செடிகளுடன் சந்தேகநபர் கைது...

2025-02-09 09:57:02
news-image

சந்தேகநபர்களை விடுவிப்பதற்கான சட்டமா அதிபரின் தீர்மானம்...

2025-02-09 09:35:48
news-image

சில பகுதிகளில் ஆரோக்கியமற்ற நிலையில் காற்றின்...

2025-02-09 10:07:00
news-image

14 இந்திய மீனவர்கள் கைது

2025-02-09 09:35:46
news-image

தமிழரசுக்கு எதிரான திருமலை வழக்கு :...

2025-02-08 23:29:29
news-image

ஜனாதிபதி அநுர நாளை எமிரேட்ஸ் செல்கிறார்

2025-02-09 08:57:55
news-image

சட்டமா அதிபர் திணைக்களத்தின் சுயாதீனத்துவத்தை உறுதிப்படுத்துங்கள்...

2025-02-08 23:28:18
news-image

அரசியல் தீர்வை கைவிட்டால் நாடு பாதாளத்தில்...

2025-02-08 23:27:28
news-image

சட்டமா அதிபரை பதவி விலக செய்வதற்கு...

2025-02-08 23:26:12
news-image

கிரிஷ் கட்டிடத்தில் எவ்வாறு தீ பரவியது?...

2025-02-08 23:31:16