மட்டக்களப்பு உன்னிச்சை குளத்தின் 4 வான்கதவுகள் திறப்பு 

22 Jan, 2025 | 05:05 PM
image

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்துவரும் மழை காரணமாக உன்னிச்சை குளத்தின் நீர்மட்டம் இன்று புதன்கிழமை (22) காலை 7 மணி வரையில் 31 அடி 8 அங்குலமாக உயர்ந்திருந்தது. இதனால் அக்குளத்தின் 4 வான்கதவுகள் 5 அங்குலம் உயரத்துக்கு இன்று திறந்துவிடப்பட்டதாக உன்னிச்சை குளத்தின் திட்ட முகாமையாளர் செ.மேகநாதன் தெரிவித்தார். 

இதனால் செக்கனுக்கு 3425 கன அடி நீர் வெளியேற்றப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

உன்னிச்சை குளத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டதால் குளத்தை அண்மித்த தாழ் நிலங்கள் பாரியளவு வெள்ளத்தில் மூழ்கியுள்ளன,

இதனால் உன்னிச்சை குளத்தை அண்மித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார். 

இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள நவகிரி குளத்தின் நீர்மட்டம் 30 அடி 9 அங்குலம், உறுகாமம் குளத்தின் நீர்மட்டம் 16 அடி 10 அங்குலம், வாகனேரி குளத்தின் நீர்மட்டம் 19 அடி 7அங்குலம், வடமுனைக் குளத்தின் நீர்மட்டம் 12 அடி 8 அங்குலம், வெலிக்காக்கண்டிய குளத்தின் நீர்மட்டம் 15 அடி 5 அங்குலம், கட்டுமுறிவுக் குளத்தின் நீர்மட்டம் 12 அடி அளவுகளுக்கு உயர்ந்துள்ளதாக அக்குளங்களுக்குப் பொறுப்பான நீர்ப்பாசனப் பொறியியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லசந்த விக்கிரமதுங்க படுகொலை விசாரணை சுருக்கத்தை; ...

2025-02-10 02:02:13
news-image

இழப்புக்களை ஏற்படுத்த தூண்டியவர்களை இனங்கண்டுள்ளோம்; அவர்களுக்கெதிராக...

2025-02-10 01:54:10
news-image

நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட திடீர் மின்தடை ...

2025-02-10 01:46:26
news-image

எந்தவொரு வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர்...

2025-02-09 15:15:31
news-image

பேச்சுவார்த்தைகளில் இணக்கப்பாடு இன்றேல் நிச்சயம் நாட்டுக்கு...

2025-02-09 15:22:37
news-image

ஜனாதிபதி நீதித்துறை கட்டமைப்பில் தலையீடு செய்யப்போவதில்லை...

2025-02-09 19:41:29
news-image

Clean sri lanka நிகழ்ச்சித் திட்டம்...

2025-02-09 23:19:15
news-image

யாழ். பல்கலைக்கழக முகாமைத்துவபீட மாணவர்களிடையே மோதல்...

2025-02-09 22:25:18
news-image

பா.உறுப்பினர்கள்122 கோடி ரூபா இழப்பீடு பெற்றுக்கொண்டமை...

2025-02-09 17:13:39
news-image

வீடுகளுக்கு தீ வைத்ததாலே அரங்கத்துக்கு நஷ்டஈடு...

2025-02-09 17:28:01
news-image

அதிபர் - ஆசிரியர் தொழிற்சங்கங்களுக்கும் பிரதமருக்கும்...

2025-02-09 19:55:46
news-image

எம்.பிக்களுக்கு 122 கோடி ரூபா இழப்பீடு...

2025-02-09 17:19:20