சட்டத்தை மீறினால் அரிசி ஆலைகள் இராணுவத்தின் பொறுப்பில் எடுக்கப்படும் - ஜனாதிபதி

Published By: Digital Desk 7

22 Jan, 2025 | 04:59 PM
image

(எம்.வை.எம்.சியாம்)

நெல்லை களஞ்சியப்படுத்த வேண்டுமானால் நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையிலும், நெற் களஞ்சியப்படுத்தல் அதிகாரசபையிலும் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யாத எவருக்கும் நெல்லை களஞ்சியப்படுத்த முடியாது. சட்டத்தை மீறினால் அரிசி ஆலைகள் இராணுவத்தின் பொறுப்பில் எடுக்கப்படும்.  நாம்    எதிர்காலத்தில்   உரிய முறையில் திட்டமிட்டு  செயல்பட உள்ளோம் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சியின் ஒன்றின் நேர்காணலில் நேற்றுமுன்தினம் கலந்து கொண்ட ஜனாதிபதியிடம்,

 தற்போது நாட்டில் எழுந்துள்ள அரிசி தட்டுப்பாடு மற்றும் அதனுடன் தொடர்புடைய பிரச்சினைகள் சம்பந்தமாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே  அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது,

அரிசி தொடர்பிலான தரவுகள் பாரியளவில் திரிவுப்படுத்தப்பட்டுள்ளன.வருடமொன்றுக்கு எவ்வளவு அரிசி உற்பத்தி செய்யப்படுகிறது என்பது எமக்கு தெரியாது.வருடமொன்றுக்கு தேவையான நுகர்வின் அளவும் எமக்கு தெரியாது. அவ்வாறானதொரு நாட்டில் எவ்வாறு தீர்மானம் எடுக்க முடியும்.

பாரியளவிலான அரிசி ஆலை உரிமையாளர்கள் வங்கிகளில் கடன் பெற்று கொண்டே நெல்லை சேகரித்து வைத்துள்ளனர்.அவர்களிடம் நிரந்தர தொழில் புரியும் ஊழியர்களே உள்ளனர். பதுக்கலை செய்து அரிசி ஆலையை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்ல முடியாது.அது அவர்களுக்கு நட்டத்தை ஏற்படுத்தும்.

நாளாந்தம் ஆலைகளை மூடி வைத்திருப்பதை விட 2 ரூபாவுக்கு வழங்குவது சிறந்தது என சிறிய அளவிலான அரிசி ஆலை  உரிமையாளர்கள் எம்மிடம் கூறுகின்றனர்.

அவர்கள் வங்கியில் கடன் பெற்றுக் கொண்டுள்ளனர்.போக்குவரத்து கட்டணம் செலுத்த வேண்டும்.ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும்.எனவே பாரியளவிலான அரிசி ஆலை உரிமையாளர்கள் நெல்லை பதுக்கி வைக்கவில்லை.அது பொய்யாகும்.

தடுப்பதற்காக போதுமான வளம் இன்றி இதற்கு எதிராக எம்மால் போராட முடியாது.சரியான வளங்களை எம்மால் ஏற்படுத்திக் கொண்டால் எமக்கு அந்த சவாலுக்கு முகங்கொடுக்க முடியும் எமது திட்டத்திற்கு அமைய செயல்படவில்லை எனில் அவர்களுக்கு எதிராக நாம் செயற்படுவோம்.சட்டத்தை மீறினால் அரிசி ஆலைகளை இராணுவத்தினரின் பொறுப்பில் கொண்டு வருவோம்.

கேள்வி- அடுத்த போகத்திலும் அரிசியை இறக்குமதி செய்ய வேண்டி ஏற்படுமா?

பதில்- முதலில் எமக்கு தரவு கட்டமைப்பு அவசியமாகும்.நெல்லை களஞ்சியப்படுத்தும் எவரும் அரசாங்கத்தில் பதிவு செய்ய வேண்டும் என சுற்றுநிருபம் வெளியிட்டுள்ளோம்.அரசாங்கத்தில் நெல்லை பதிவு செய்யாமல் அதனை களஞ்சியப்படுத்த முடியாது. 

தனக்கு தேவையான அரிசியை தனது வீட்டில் சேமித்து வைத்திருப்பதை நாம் கூறவில்லை.பாரியளவில் நெல்லை களஞ்சியப்படுத்தி வைக்கும் ஒருவர் கட்டாயமாக நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபையிலும் நெற்களஞ்சியப்படுத்தல் அதிகாரசபையிலும் பதிவு செய்ய வேண்டும்.இவ்வாறு பதிவு செய்வதன் ஊடாக நெல்லை களஞ்சியப்படுத்துவர்களிடமிருந்து தரவுகளை எமக்கு பெற்றுக்கொள்ள முடியும்.

இந்த பெரும் போகத்துக்காக 20 மில்லியன் ரூபாவை வழங்கியுள்ளோம்.இது தேசிய சொத்தாகும்.எனவே தனிநபர் தமக்கு

ஏற்றாற் போல மறைத்திருக்கவோ அல்லது களஞ்சியப்படுத்தி வைத்திருக்கவோ முடியாது. அது தொடர்பில் அரசாங்கத்துக்கு அறிக்கை சமர்பிக்க வேண்டும்.அவ்வாறு செய்யாதா உரிமையாளர்களின் ஆலைகள் அரசாங்கம் கையக்கப்படுத்திக்கொள்ளும்.

நிதியமைச்சின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் 500 கோடி ரூபாவை ஒதுக்க இணக்கம் தெரிவித்தோம்.அரசாங்கம் நெல்லை பெற்றுக்கொள்ளும்.முதற்கட்டமாக 100 கோடியை ஒதுக்கவுள்ளோம்.எம்மால் அறிந்த கட்டுப்படுத்த முடிந்த நெல்லை களஞ்சியப்படுத்த வேண்டும்.இதற்கமைய இரு தரப்பினரிமம் நெல் கையிருப்பில் இருக்கும்.ஒன்று அரிசி ஆலை உரிமையாளர்களிடம் உள்ளது.மற்றையது அரசாங்கத்திடம் உள்ளது.

இவ்வாறான கட்டமைப்பின் ஊடாக இந்த நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டும்.நிர்ணயிக்கப்பட்ட விலை விட அதிக விலைக்கு வழங்குவதற்கு சில நாட்கள் வழங்குங்கள்.தடுப்பதற்காக போதுமான வளம் இன்றி இதற்கு எதிராக எம்மால் போராட முடியாது.

சரியான வளங்களை எம்மால் ஏற்படுத்திக் கொண்டால் எமக்கு இந்த சவாலுக்கு முகங்கொடுக்க முடியும்.எமது திட்டத்துக்கு அமைய செயல்படவில்லை எனில் அவர்களுக்கு எதிராக நாம் செயற்படுவோம்.சட்டத்தை மீறினால் அரிசி ஆலைகள் இராணுவத்தினரின் பொறுப்பில் கொண்டு வரப்படும்.

அரிசி ஆலையின் முகாமையாளர் மற்றும் ஊழியர்களின் பங்கேற்புடன் இதனை செய்வோம். உற்பத்தி செய்யப்படும் அரிசியின் அளவை இராணுவத்தினர் கணக்கிடுவார்கள்.வர்த்தக நிலையம் வரை அரிசியின் விலை விற்பனையை கண்காணிக்கப்படும்.

முடிந்தால் மோதி பாருங்கள்.உரிய முறையில் திட்டமிட்டு செயல்பட உள்ளோம்.எனவே நிர்ணய விலையில் விற்பனை செய்யக்கூடிய வகையில் நெல்லைக்கொள்வனவு செய்யுங்கள் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

32,000 கஞ்சா செடிகளுடன் சந்தேகநபர் கைது...

2025-02-09 09:57:02
news-image

சந்தேகநபர்களை விடுவிப்பதற்கான சட்டமா அதிபரின் தீர்மானம்...

2025-02-09 09:35:48
news-image

சில பகுதிகளில் ஆரோக்கியமற்ற நிலையில் காற்றின்...

2025-02-09 10:07:00
news-image

14 இந்திய மீனவர்கள் கைது

2025-02-09 09:35:46
news-image

தமிழரசுக்கு எதிரான திருமலை வழக்கு :...

2025-02-08 23:29:29
news-image

ஜனாதிபதி அநுர நாளை எமிரேட்ஸ் செல்கிறார்

2025-02-09 08:57:55
news-image

சட்டமா அதிபர் திணைக்களத்தின் சுயாதீனத்துவத்தை உறுதிப்படுத்துங்கள்...

2025-02-08 23:28:18
news-image

அரசியல் தீர்வை கைவிட்டால் நாடு பாதாளத்தில்...

2025-02-08 23:27:28
news-image

சட்டமா அதிபரை பதவி விலக செய்வதற்கு...

2025-02-08 23:26:12
news-image

கிரிஷ் கட்டிடத்தில் எவ்வாறு தீ பரவியது?...

2025-02-08 23:31:16
news-image

வெளிநாட்டு சேவை நியமனங்களில் அரசியல் மயமாக்கம்...

2025-02-08 23:30:12
news-image

இன்றைய வானிலை

2025-02-09 06:49:28