திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா பிரதேச சபை பிரிவுக்குட்பட்ட சுமார் ஒரு இலட்சம் மக்கள் போக்குவரத்து மற்றும் வியாபார நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தும் குறிஞ்சாக்கேணி பாலத்தின் நிர்மாணப்பணிகளை மீள ஆரம்பிப்பதற்காக 10.5 மில்லியன் டொலர் நிதித்தொகை ஒதுக்கப்படவுள்ளது.
பேராதனை மற்றும் பதுளை, செங்கலடி வீதியின் புனரமைப்பு பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட பணத்தொகையில் எஞ்சிய பணத்தொகையை இந்த பாலத்தின் நிர்மாணப் பணிகளுக்காக ஒதுக்கப்படுவதற்கான திருத்தப்பட்ட ஒப்பந்தம், நிதி அமைச்சின் செயலாளர் மகிந்த சிறிவர்தன மற்றும் சவூதி அபிவிருத்தி நிதியத்தின் பணிப்பாளர் (சட்ட) அப்துல் மொசன் ஏ. அல்முல்லா ஆகியோருக்கு இடையில் கைச்சாத்திடப்பட்டது.
இந்த திருத்தப்பட்ட ஒப்பந்தம் மூலம் பதுளை, செங்கலடி வீதி அபிவிருத்தித் திட்டத்தில் எஞ்சிய பணம் வீதி வலையமைப்பு அபிவிருத்தி பணிகளுக்கு மாற்றப்பட்டு, குறிஞ்சாக்கேணி பாலத்தின் நிர்மாணப்பணிகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளது.
இந்த பாலம் நிர்மாணிக்கப்படுவதால் அவ்வீதியூடான போக்குவரத்து பிரச்சினைகள் முடிவுக்கு வரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM