உண்மையான தேசிய பிரச்சினையை அறிந்து அவற்றுக்கு தீர்வு வழங்குங்கள் ; விமல் வீரவன்ச

22 Jan, 2025 | 04:56 PM
image

(எம்.மனோசித்ரா)

முச்சக்கரவண்டிகளில் மேலதிக பாகங்களை அகற்றுவதும், உத்தியோகபூர்வ இல்லங்களை கைப்பற்றுவதும் தேசிய பிரச்சினை அல்ல. இது அரசியல் பழிவாங்கலாகும். 

எனவே இவற்றை கைவிட்டு உண்மையான அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வினை வழங்க அரசாங்கம் முன்வர வேண்டும் என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

இன்று புதன்கிழமை (22) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இந்த அரசாங்கம் பதவியேற்ற நாள் முதல் வெறுக்கத்தக்க வகையில் அரசியல் பழிவாங்கல்களிலேயே ஈடுபட்டு வருகிறது. 

ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்னும் தம்மை எதிர்க்கட்சியினர் என்றே எண்ணிக் கொண்டிருக்கின்றனர். 

கடந்த ஆட்சிகளில் யாராவது ஒருவருடைய சொத்துக்களைப் பிடித்துக் கொண்டு அதனை பிரபலப்படுத்திக் கொண்டு முக்கிய பிரச்சினைகளை மறந்து விடுகின்றனர்.

இந்தியாவுடனான ஒப்பந்தங்களை மறந்து விட்டனர். இலங்கை - இந்தியாவுக்கிடையிலான நிலத் தொடர்புகள் மூலம் ஏற்படக் கூடிய பாதிப்புக்கள் குறித்து அரசாங்கத்தில் எவரும் பேசுவதில்லை.

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பினை நீக்குவதும், அவர்களை உத்தியோகபூர்வ இல்லங்களிலிருந்து வெளியேறுமாறு கூறுவதும் நாகரிகமான செயற்பாடு அல்ல. இவர்களுக்கு வாக்களித்த மக்களின் கோரிக்கை இவையல்ல.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாரிய உயிர் அச்சுறுத்தலுக்கு மத்தியில் பயங்கரவாதத்தை தோற்கடித்து நாட்டில் அமைதியை நிலைநிறுத்திய தலைவர் என்பதை அனைவரும் அறிவர். 

அவ்வாறான ஒருவருக்கு உயிர் அச்சுறுத்தல் இல்லை என்பதை எவருக்கும் கூற முடியாது. எனவே இவ்வாறான கீழ் தரமான செயற்பாடுகளை தவிர்த்து உண்மையான அரசியல் பிரச்சினைகளுக் தீர்வினை வழங்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

முச்சக்கரவண்டிகளில் மேலதிக பாகங்களை அகற்றுவதும், உத்தியோகபூர்வ இல்லங்களை கைப்பற்றுவதும் தேசிய பிரச்சினை அல்ல.

இது அரசியல் பழிவாங்கலாகும். மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக வாக்களித்தவர்கள் கூட அவரின் பாதுகாப்பு முழுமையாக நீக்கப்படுவதை விரும்பமாட்டார்கள். 

குறுகிய அரசியல் நோக்கத்துடன் செயற்படுபவர்களால் மாத்திரமே இவ்வாறு சிந்திக்க முடியும் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

12 பிரதி பொலிஸ் மா அதிபர்கள்,...

2025-02-08 12:18:00
news-image

சம்மாந்துறையில் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது

2025-02-08 11:58:07
news-image

குருணாகலில் உள்நாட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர் கைது...

2025-02-08 12:12:59
news-image

வத்தளையில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது...

2025-02-08 12:09:11
news-image

திருகோணமலை – கொழும்பு பகல்நேர ரயில்...

2025-02-08 11:55:17
news-image

நாரங்கல பகுதியில் புதையல் தோண்டிய நால்வர்...

2025-02-08 11:51:45
news-image

கணவனால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு மனைவி...

2025-02-08 11:28:56
news-image

மாத்தறையில் கால்வாயிலிருந்து ஆணின் சடலம் மீட்பு!

2025-02-08 11:19:51
news-image

யாழ். கட்டைக்காடு கடற்கரையில் கொக்கெய்ன் போதைப்பொருள்...

2025-02-08 11:02:22
news-image

முல்லைத்தீவில் பஸ் சாரதி மீது வாள்வெட்டுத்...

2025-02-08 09:59:53
news-image

வவுனியாவில் பாடசாலை ஒன்றில் உயர்தர மாணவன்...

2025-02-08 09:57:57
news-image

சுகாதாரத்துறை சார் ஊழியர்களுக்கான பணியிடமாற்றத்துக்கு நிறைவுகாண்...

2025-02-07 20:16:30