கொமர்ஷல் வங்கி, இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவகத்தின் (SLIM) 2024 வர்த்தக நாம சிறப்பு விருதுகளில், நிலைபெறுதகு தன்மைக்கான வங்கியின் அர்ப்பணிப்புக்கு பொருத்தமான அங்கீகாரமாக, இலங்கையின் 'ஆண்டின் பசுமை வர்த்தக நாமத்திற்காக' தங்க விருதினை வென்றுள்ளது.
சொந்த செயற்பாடுகளுக்கு அப்பால் நாடு முழுவதிலும் உள்ள சமூகங்களை முன்னிறுத்தி தேசிய முக்கியத்துவம் வாய்ந்த முயற்சிகளை உள்ளடக்கிய நிலையில் நிலைபெறுதகு தன்மையை மேம்படுத்துவதில் மேற்கொண்டுள்ள கணிசமான முதலீடுகள் மற்றும் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை இந்த விருதானது அங்கீகரிப்பதாக உள்ளது.
இந்த நிலைபெறுதகுதன்மைக்கான திட்டங்களில் 2023 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட வங்கியின் 'தேசத்திற்கான மரங்கள்' திட்டத்தின் கீழ் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் 100,000 மரங்களை நடும் செயற்திட்டமானது 12 மாதங்களில் பூர்த்தி செய்யப்பட்டமை மற்றும் இன்னும் மேலதிகமாக 100,000 மரங்களை நடுவதற்கான வங்கியின் உறுதிப்பாடு என்பவை முக்கியமானவை.
இலங்கையின் முதல் கார்பன் நடுநிலை வங்கியாக 2021 ஆம் ஆண்டில் தெரிவு செய்யப்பட்டு சாதனையை பதிவு செய்த கொமர்ஷல் வங்கியின் நிலைபெறுதகு தன்மைக்கான பயணம் 25 ஆண்டுகளுக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டதுடன் கடந்த நான்கு ஆண்டுகளில் இம்முயற்சியானது சீரான கதியில் இடம்பெற்று வருகிறது.
படவிளக்கம் : கொமர்ஷல் வங்கியின் சந்தைப்படுத்தல் குழுவின் பிரதிநிதிகள் விருதை ஏற்றுக்கொள்கின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM