செலிங்கோ லைஃப் அண்மையில் காலியில் உள்ள நெலுவவில் நடத்திய ஜமருத்துவர் சந்திப்புஸ சமூக சுகாதார திட்டத்தின் கீழ் இலவச மருத்துவ முகாமை நடத்தியது.
செலிங்கோ லைஃப் இந்த முகாமுடன் சேர்ந்து நிறைவடைந்த 2024 ஆம் ஆண்டில் நடத்திய 12 முகாம்களின் மூலம் 2,600 பேர் பயனடைந்துள்ளனர்.
நீண்டகாலமாக செயற்படுத்தப்பட்டு வரும் திட்டம் தற்போது 20 வருடங்களை நிறைவு செய்துள்ளது.
மேலும் இத்திட்டத்தின் மூலம் இதுவரையில் 150,000 பேருக்கு மேல் சிகிச்சைக்காக மருத்துவர்களை அணுகுவதற்கான வாய்ப்பு மற்றும் நோயறிதல் பரிசோதனைகளை வழங்கியுள்ளதுடன், முன்னர் கண்டறியப்படாத தொற்றா நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதில் குறிப்பிடத்தக்க பங்கை வகித்து வருகிறது.
2024 ஆம் ஆண்டு பதுளை, இரத்தினபுரி, திருகோணமலை, மட்டக்களப்பு, மொனராகலை, ஹம்பாந்தோட்டை, அம்பாறை, பொலன்னறுவை, புத்தளம், குருநாகல், மாத்தறை மற்றும் காலி ஆகிய நகரங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன.
இந்த முகாம்களை நடத்துவதற்காக 2024 ஆம் ஆண்டில் செலிங்கோ லைஃப் ஊழியர்களுடன் மருத்துவக் குழுக்கள் 5,000 கிலோமீற்றர்களுக்கு மேல் பயணித்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த முகாம்கள் ஒவ்வொன்றிலும், அந்தந்த பகுதிகளில் வசிப்பவர்கள் சீரற்ற அல்லது உணவருந்தா இரத்த சர்க்கரை பரிசோதனைகள், இரத்த அழுத்தம், ஈசிஜி, சீரம் கொழுப்பு மற்றும் நாள்பட்ட சிறுநீரக நோய்க்கான சிறுநீர் சோதனைகள் போன்ற பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டது.
மேலதிகமாக, அவர்களின் உடல் நிறை குறியீட்டெண் சோதிக்கப்பட்டதுடன் மற்றும் பயிற்சி பெற்ற மருத்துவ தொழில்நுட்பவியலாளர்களால் கண் பார்வை பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன.
அதன்பின்னர் ஒவ்வொரு பார்வையாளரும் மருத்துவர் ஒருவரை சந்தித்து பரிசோதனை முடிவுகளைப் பற்றி விவாதிக்கவும் மற்றும் மருத்துவ ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளவும் வாய்ப்பு வழங்கப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM