அம்பாந்தோட்டை - ரிதியகம சபாரி பூங்காவில் பிறந்து மூன்று மாதங்களேயான 6 சிங்கக்குட்டிகளுக்கு பெயர் சூட்டுவதற்காக பூங்காவின் இயக்குநர் பொதுமக்களுக்கு வாய்ப்பளித்துள்ளார்.
அதன்படி, இப்பூங்காவில் வளரும் ஐந்து பெண் சிங்கக் குட்டிகளுக்கும் ஓர் ஆண் சிங்கக் குட்டிக்கும் பொதுமக்கள் சூட்ட விரும்பும் பெயர்களை அஞ்சல் அட்டையில் எழுதி, அதனுடன் தொலைப்பேசி எண்ணையும் இணைத்து ரிதியகம சபாரி பூங்காவின் முகவரிக்கு அனுப்புமாறு அதன் பணிப்பாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
ரிதியகம சபாரி பூங்காவில் உள்ள லாரா, டோரா ஆகிய இரு பெண் சிங்கங்களுக்கும் பிறந்த இந்த ஆறு குட்டிகளும் தற்போது மூன்று மாத வயதுடையவையாக உள்ளன.
டோரா மூன்று பெண் சிங்கக் குட்டிகளையும் லாரா இரண்டு பெண் சிங்கக் குட்டிகள் மற்றும் ஓர் ஆண் சிங்கக் குட்டியையும் ஈன்றுள்ளன. இந்த ஆறு சிங்கக் குட்டிகளுக்கு பெயர் சூட்ட தற்போது தீர்மானித்துள்ளோம்.
அடுத்த மாதம் பொதுமக்கள் பார்வையிடுவதற்காக இந்த சிங்கக் குட்டிகள் காட்சிக்கு வைக்கப்படவுள்ளன. அத்துடன் இந்த சிங்கக் குட்டிகளுக்கு பெயர் வைக்கும் அரிய வாய்ப்பும் பொது மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM