SLT-MOBITEL மற்றும் PEO SPORTS இணைந்து அடுத்த தலைமுறை குத்துச்சண்டை சம்பியன்களுக்கு வலுவூட்டுகின்றது

Published By: Digital Desk 7

22 Jan, 2025 | 01:46 PM
image

SLT-MOBITEL மற்றும் PEO SPORTS ஆகியன அண்மையில் நடைபெற்ற பெருமைக்குரிய Clifford Cup & Youth Boxing Tournament 2024 இன் உத்தியோகபூர்வ ஒளிபரப்பு பங்காளராக இணைந்திருந்தன.

இந்நிகழ்வு அண்மையில் கண்டி, சஹஸ் உயனவில் நடைபெற்றது. இலங்கை குத்துச் சண்டை சம்மேளனத்துடன் (BASL) இணைந்து இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டதுடன், நாட்டின் இளம் திறமைசாலிகளை ஒன்றிணைக்கும் வகையில் அமைந்திருந்தது. 

The Clifford Cup & Youth Boxing Tournament என்பது, இலங்கையின் குத்துச் சண்டை சமூகத்தின் அதிசிறந்த திறமையை வெளிப்படுத்துவதாக மாத்திரம் அமைந்திராமல், இளைஞர்களுக்கு வலுவூட்டியிருந்ததுடன், மெய்வல்லுநர் விருத்தியையும் ஊக்குவிக்கும் SLT-MOBITEL'இன் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்தியிருந்தது.

பெருமளவு எதிர்பார்ப்புகளை கொண்ட இந்த நிகழ்வில், 100 க்கும் அதிகமான பாடசாலைகள், 20 விளையாட்டு கழகங்கள் மற்றும் இராணுவம், கடற்படை மற்றும் விமானப் படை அணிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் அணிகள் போன்றவற்றின் 500க்கும் அதிகமான வீரர்கள் பங்கேற்றனர்.

SSW இலங்கையின் விளையாட்டுத் துறையில் The Clifford Cup & Youth Boxing Tournament 2024 என்பது முக்கிய மைல்கல்லாக அமைந்திருக்கும். SLT-MOBITEL மற்றும் PEO SPORTS இனால் சிறந்த ஆதரவு வழங்கப்பட்டிருந்தது.

நிகழ்வு பார்வையாளர்களை கவரும் வகையில் அமைந்திருந்ததுடன், விளையாட்டின் வலிமை மற்றும் ஒற்றுமையை ஊக்குவிப்பதாகவும் அமைந்திருந்தது. இலங்கையின் குத்துச் சண்டை சமூகத்தின் பிரகாசமான எதிர்காலத்துக்கான சிறந்த களமாகவும் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையின் பொருளாதாரத்தை புத்துயிர் பெறச்செய்தல்: வளர்ச்சியை...

2025-02-09 15:23:19
news-image

SLIM National Sales Awards 2024...

2025-02-08 18:18:45
news-image

யூனியன் அஷ்யூரன்ஸ் பாங்கசூரன்ஸ் MDRT தகைமையாளர்களுக்கான...

2025-02-08 18:18:18
news-image

முன்பள்ளி கல்வியை மேம்படுத்த UNICEFஉடன் இணையும்...

2025-02-06 10:13:01
news-image

விலை உறுதிப்பாடு : தவிர்க்க முடியாததொன்றா?

2025-02-05 18:33:08
news-image

கச்சா எண்ணெய் விலையில் மாற்றம்

2025-02-05 17:22:13
news-image

இலங்கையின் "சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ்" கெசினோ ...

2025-02-05 17:05:26
news-image

சம்பத் வங்கி மற்றும் யூனியன் அஷ்யூரன்ஸ்...

2025-02-05 11:44:52
news-image

TAGS விருதுகள் 2024 – Prime...

2025-02-05 11:41:48
news-image

வடபிராந்திய முயற்சியாண்மைகளை வலுப்படுத்த டேவிட் பீரிஸ்...

2025-02-03 14:56:40
news-image

‘C'est La Vie’– பிரான்ஸ் நாட்டின்...

2025-02-02 09:41:53
news-image

இலங்கையின் சிறந்த ஆயுள் காப்புறுதி நிறுவனமாக...

2025-01-30 12:16:32