யாழில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய வர்த்தக நிலையங்களுக்கு 11 இலட்சத்து 67 ஆயிரம் தண்டம்

Published By: Digital Desk 7

22 Jan, 2025 | 01:23 PM
image

யாழ்ப்பாணத்தில் சுகாதார விதிமுறைகளை மீறிய வர்த்தக நிலையங்கள் மற்றும் உணவகங்களுக்கு 11 இலட்சத்து 67 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. 

நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட திருநெல்வேலி பகுதியில் சுகாதார பரிசோதகரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது, உணவகம் மற்றும் பூட் சிற்றியில் காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த நிலையில் மீட்கப்பட்டன. 

அவை தொடர்பில் சுகாதார பரிசோதகரால் யாழ் . மேலதிக நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் , தம் மீதான குற்றச்சாட்டை மன்றில் ஏற்றுக்கொண்டதை அடுத்து உரிமையாளர்களுக்கு ஒரு இலட்சத்து 20 ஆயிரம் மற்றும் ஒரு இலட்சத்து 47 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. 

அதேவேளை , யாழ் . மாநகர சபைக்கு உட்பட்ட அரியாலை , வண்ணார் பண்ணை , நாவாந்துறை பகுதிகளில் பொது சுகாதார பரிசோதகரால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய 05 வர்த்தக நிலையங்கள் கண்டறியப்பட்டு அவற்றுக்கு எதிராக யாழ் . மேலதிக நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது. 

வழக்கு விசாரணையின் போது , தம் மீதான குற்றச்சாட்டை 05 வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்களும் ஏற்றுக்கொண்டதை அடுத்து அவர்களுக்கு தலா ஒரு இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மேம்பாட்டுக்கு ஒத்துழைக்குமாறு சுவிட்சிடம்...

2025-02-12 10:22:56
news-image

இறுதிச் சடங்கு நிகழ்வில் கத்திக்குத்துக்கு இலக்காகி...

2025-02-12 10:12:15
news-image

வவுனியாவில் திருட்டுச் சம்பவம் தொடர்பில் ஒருவர்...

2025-02-12 10:15:09
news-image

139 பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு இடமாற்றம் 

2025-02-12 09:53:34
news-image

கஜேந்திரகுமாருக்கு நீதிமன்று அழைப்பாணை

2025-02-12 09:57:38
news-image

லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிறுநீரக...

2025-02-12 09:17:43
news-image

டான் ப்ரியசாத்துக்கு விளக்கமறியல்

2025-02-12 09:52:23
news-image

இன்றைய வானிலை

2025-02-12 06:42:10
news-image

இலங்கையில் ஆண் - பால் பாலினம்...

2025-02-11 22:32:27
news-image

மின் துண்டிப்பினால் ஏற்பட்ட நஷ்டம் தொடர்பில்...

2025-02-11 22:30:03
news-image

புலிகளால் 33,000 மெகாவோல்ட் மின் பிறப்பாக்கி...

2025-02-11 15:11:06
news-image

வானிலை மாற்றத்தை எதிர்கொள்ளக்கூடிய விவசாயத்துக்கான கூட்டுத்திட்டம்...

2025-02-11 22:26:46