பாடசாலை மாணவி கடத்தல் ;  பதில் பொலிஸ் பொறுப்பதிகாரி பணி இடைநிறுத்தம் 

Published By: Digital Desk 3

22 Jan, 2025 | 01:23 PM
image

கம்பளை, தவுலகல பகுதியில் பாடசாலை மாணவி ஒருவர் வேனில் கடத்திச் செல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் விரைவாக நடவடிக்கை எடுக்கத் தவறிய குற்றச்சாட்டில் தவுலகல பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதோடு, இரு பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவ தினத்தன்று கடமையில் இருந்த  மகளிர் மற்றும் சிறுவர் பணியகத்தின் பிரதான பெண் பொலிஸ் பரிசோதகர், கடுகண்ணாவை பொலிஸ் நிலையத்திற்கும், குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரியாக செயற்பட்ட உப பொலிஸ் பரிசோதகர், வேலம்பொடை பொலிஸ் நிலையத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மாணவி கடத்தப்பட்ட தினம்,  சம்பவம் இடம்பெற்ற பகுதி ஊடாக பயணித்த கம்பளை பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தவுலகல பொலிஸாருக்கு அறிவித்த போதும், கடமையில் இருந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிறுநீரக...

2025-02-12 09:17:43
news-image

இன்றைய வானிலை

2025-02-12 06:42:10
news-image

இலங்கையில் ஆண் - பால் பாலினம்...

2025-02-11 22:32:27
news-image

மின் துண்டிப்பினால் ஏற்பட்ட நஷ்டம் தொடர்பில்...

2025-02-11 22:30:03
news-image

புலிகளால் 33,000 மெகாவோல்ட் மின் பிறப்பாக்கி...

2025-02-11 15:11:06
news-image

வானிலை மாற்றத்தை எதிர்கொள்ளக்கூடிய விவசாயத்துக்கான கூட்டுத்திட்டம்...

2025-02-11 22:26:46
news-image

இழப்பீடுகள் தொடர்பில் விரைவில் முழுமையான அறிக்கை...

2025-02-11 22:29:08
news-image

வீட்டை விட்டு வெளியேறுமாறு அரசாங்கம் உத்தியோகபூர்வமாக...

2025-02-11 15:56:24
news-image

பொய்யான தகவல்கள் மூலம் மின்விநியோக பிரச்சினைகளை...

2025-02-11 17:26:43
news-image

பெலவத்தை பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட நவீன கட்டமைப்பின்...

2025-02-11 17:25:53
news-image

வரவு செலவு திட்டத்தின் மூலம் அரசாங்க...

2025-02-11 16:20:05
news-image

புதிய அரசியலமைப்பு விவகாரத்தில் தமிழ்த்தலைமைகள் பொதுநிலைப்பாடொன்றுக்கு...

2025-02-11 17:29:14