முச்சக்கர வண்டி சாரதியை தடுத்துவைத்து சித்திரவதை செய்த தெமட்டகொட பொலிஸார்

Published By: Rajeeban

22 Jan, 2025 | 12:55 PM
image

முச்சக்கர வண்டிசாரதியை தடுத்துவைத்து சித்திரவதை செய்தமை தொடர்பில் தெமட்டகொட பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரிக்கு கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் சட்ட அறிவிப்பை விடுத்துள்ளது.

தெமட்டகொட பொலிஸார்முச்சக்கரவண்டி சாரதியொருவரை கைதுசெய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படு;த்தாமல் 7 நாட்கள் தடுத்துவைத்திருந்தனர் அவரை நிர்வாணப்படுத்தி தாக்கினார்கள் என்ற முறைப்பாட்டின் அடிப்படையிலேயே நீதிமன்றம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

தனது கட்சிக்காரரான முச்சக்கர வண்டி சாரதி தொலைபேசி மூலம் விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று  ஒருவரிரை ஏற்றுவதற்காக தெமட்டகொடவிற்கு சென்றார் என அவரது சட்டத்தரணி தெரிவித்துள்ளார்,அவ்வேளை அந்த இடத்திற்கு சீருடையின்றி வந்தசிலர் துப்பாக்கியை காண்பித்து அவரை அச்சுறுத்தினார்கள்,பின்னர் அவரை தெமட்டகொட பொலிஸ் நிலையத்திற்கு கொண்டுசென்றார்கள், குப்பையொன்றில் மீட்கப்பட்ட பெண்ணின் உடல் குறித்து விசாரணை செய்தார்கள் மோசமாக தாக்கினார்கள் என சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

ஜனவரி 2ம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.எனினும் 9ம் திகதியே பொலிஸார் அந்த நபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.

மேலும் அந்த நபர் வாகனமொன்றிலிருந்து கீழே விழுந்துவிட்டார் என பொய்யான தகவலை வழங்கியுள்ளனர்.

பொலிஸாரின் தகவலை அடிப்படையாக வைத்து நீதிமன்றம் அந்த நபரை விடுதலை செய்துள்ளது பின்னர்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் 18 ம் திகதிவரை சிகிச்சை பெற்றுள்ளார்.

தங்களிற்கு எதிராக முறைப்பாடு செய்தால் அந்த நபரின் வாகனத்தில் போதைப்பொருளை வைத்துவிட்டு குற்றச்சாட்டை பதிவு செய்வோம் என பொலிஸார் எச்சரித்துள்ளனர் என நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனது சகோதரரனின் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக தெரிவித்து பாதிக்கப்பட்டவரின் சகோதரி இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2025-02-12 06:42:10
news-image

இலங்கையில் ஆண் - பால் பாலினம்...

2025-02-11 22:32:27
news-image

மின் துண்டிப்பினால் ஏற்பட்ட நஷ்டம் தொடர்பில்...

2025-02-11 22:30:03
news-image

புலிகளால் 33,000 மெகாவோல்ட் மின் பிறப்பாக்கி...

2025-02-11 15:11:06
news-image

வானிலை மாற்றத்தை எதிர்கொள்ளக்கூடிய விவசாயத்துக்கான கூட்டுத்திட்டம்...

2025-02-11 22:26:46
news-image

இழப்பீடுகள் தொடர்பில் விரைவில் முழுமையான அறிக்கை...

2025-02-11 22:29:08
news-image

வீட்டை விட்டு வெளியேறுமாறு அரசாங்கம் உத்தியோகபூர்வமாக...

2025-02-11 15:56:24
news-image

பொய்யான தகவல்கள் மூலம் மின்விநியோக பிரச்சினைகளை...

2025-02-11 17:26:43
news-image

பெலவத்தை பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட நவீன கட்டமைப்பின்...

2025-02-11 17:25:53
news-image

வரவு செலவு திட்டத்தின் மூலம் அரசாங்க...

2025-02-11 16:20:05
news-image

புதிய அரசியலமைப்பு விவகாரத்தில் தமிழ்த்தலைமைகள் பொதுநிலைப்பாடொன்றுக்கு...

2025-02-11 17:29:14
news-image

ஐக்கிய அரபு எமிர் குடியரசுடன் முதலீட்டு...

2025-02-11 17:20:06