நேற்று மூடப்பட்ட கண்டி - மஹியங்கனை பிரதான வீதி இன்று புதன்கிழமை (22) காலை 06 மணியளவில் மீண்டும் திறக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அண்மைக்காலமாக பலத்த மழையுடனான சீரற்ற வானிலை நிலவி வருவதன் காரணமாக பல இடங்களில் மண்சரிவு அனர்த்தங்கள் ஏற்பட்டு வருகின்றன.
இந்நிலையில், கண்டி - மஹியங்கனை, உடுதும்பர, கஹடகொல்ல ஆகிய பிரதேசங்களில் மண்சரிவு, பாறைகள் சரிந்து வீதிகளில் விழும் அபாயகரமான சூழ்நிலைகள் காணப்பட்டதால் நேற்று செவ்வாய்க்கிழமை (21) மாலை 06 மணி முதல் இன்று காலை 06 மணி வரை அவ்வீதி மூடப்பட்டிருந்தது.
கண்டி மாவட்டச் செயலாளர் இந்திக உடவத்த இது தொடர்பில் தெரிவிக்கையில், இந்த அபாயகரமான சூழ்நிலைகள் தொடர்ந்து காணப்பட்டால் இரவு நேரங்களில் பயணிக்கும் பொதுமக்கள் மற்றும் வாகன சாரதிகளின் பாதுகாப்புக்காக இவ்வீதி மீண்டும் இன்றைய தினம் இரவு மூடப்படும் என கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM