மின்சாரம் தாக்கி 14 வயதுடைய சிறுவன் உயிரிழப்பு!

Published By: Digital Desk 7

22 Jan, 2025 | 11:08 AM
image

ஹுரிகஸ்வெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுதர்சனாகம பகுதியில்  நேற்று செவ்வாய்க்கிழமை (21) மின்சாரம் தாக்கி சிறுவன்  உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஹுரிகஸ்வெவ - சுதர்சனாகம  பகுதியில்  வசிக்கும் 14 வயதுடைய சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில், சிறுவன் தனது வீட்டிற்கு அருகில் இருந்த பலா மரத்தின் கிளைகளை வெட்டிக் கொண்டிருந்தபோது, பலா மரத்தின் கிளை அருகிலுள்ள மின் கம்பியில் மோதியதில், சிறுவன் மீது மின்சாரம் பாய்ந்து மரத்தில் இருந்து விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த சிறுவனை பலா மரத்தின் கிளைகளை வெட்டுமாறு பணிக்கப்பட்ட அயல் வீட்டில் வசிக்கும் 62 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், சடலம் தம்புத்தேகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு, ஹுரிகஸ்வெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்தியசெயற்குழுக் கூட்டம்...

2025-02-16 12:59:41
news-image

பஹளவெம்புவ பகுதியில் மோட்டார் சைக்கிள் -...

2025-02-16 12:57:40
news-image

நெல்லின் உத்தரவாத விலையால் விவசாயிகள் நன்மையே...

2025-02-16 12:55:32
news-image

தமிழர் தாயகத்தின் அடையாளங்களை சிதைப்பது தடுக்கப்பட...

2025-02-16 12:47:46
news-image

பண்டாரகமவில் கார் விபத்து ; இளைஞர்...

2025-02-16 13:00:13
news-image

தெரணியகல பகுதியில் கோடாவுடன் சந்தேகநபரொருவர் கைது...

2025-02-16 12:28:20
news-image

செம்மணியில் எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதிக்கு...

2025-02-16 12:26:57
news-image

நாட்டில் 16 இலட்சம் அங்கவீனர்கள் காணப்படுகின்றனர்...

2025-02-16 12:26:15
news-image

நாளை தேசிய மக்கள் சக்தியின் வரவு...

2025-02-16 11:43:58
news-image

பொத்துப்பிட்டிய பகுதியில் பொல்லால் தாக்கி ஒருவர்...

2025-02-16 12:25:19
news-image

பிரபாகரனின் படத்தை பயன்படுத்த சீமானுக்கு தடை...

2025-02-16 11:27:20
news-image

360 மில்லியன் ரூபாய் பெறுமதியான ஹாஷிஷ்...

2025-02-16 11:24:57