02 கிலோ ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

22 Jan, 2025 | 10:34 AM
image

ஹங்வெல்ல, நிரிபொல பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேக நபரொருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நேற்று செவ்வாய்க்கிழமை (21) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொனஹேன பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமிற்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஹங்வெல்ல, நிரிபொல பிரதேசத்தில் வசிக்கும் 41 வயதுடையவர் ஆவார். 

சந்தேக நபரிடமிருந்து சுமார் 02 கிலோ ஐஸ் போதைப்பொருள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த ஒரு இலட்சம் ரூபா பணம் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. 

வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள பிரபல போதைப்பொருள் கடத்தல் காரர் மற்றும் பாதாள உலக கும்பலின் தலைவர் ஒருவருக்கு சொந்தமானது என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

இதனையடுத்து,கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக ஹங்வெல்ல பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கணவனால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு மனைவி...

2025-02-08 11:28:56
news-image

மாத்தறையில் கால்வாயிலிருந்து ஆணின் சடலம் மீட்பு!

2025-02-08 11:19:51
news-image

யாழ். கட்டைக்காடு கடற்கரையில் கொக்கெய்ன் போதைப்பொருள்...

2025-02-08 11:02:22
news-image

முல்லைத்தீவில் பஸ் சாரதி மீது வாள்வெட்டுத்...

2025-02-08 09:59:53
news-image

வவுனியாவில் பாடசாலை ஒன்றில் உயர்தர மாணவன்...

2025-02-08 09:57:57
news-image

சுகாதாரத்துறை சார் ஊழியர்களுக்கான பணியிடமாற்றத்துக்கு நிறைவுகாண்...

2025-02-07 20:16:30
news-image

ஒரு சில தமிழ், முஸ்லிம் தலைவர்கள்...

2025-02-07 20:22:35
news-image

இன்றைய வானிலை

2025-02-08 06:05:17
news-image

புளியங்குளத்தில் மின்சாரம் தாக்கி 6 வயது...

2025-02-08 02:19:36
news-image

வவுனியாவில் முச்சக்கர வண்டியின் மேலதிக பாகங்களுக்கு...

2025-02-08 01:58:23
news-image

மக்கள் மத்தியில் தவறான நிலைப்பாட்டை தோற்றுவிக்க...

2025-02-07 20:28:48
news-image

தொண்டைமனாறு வெளிக்கள நிலையத்தின் நிர்வாகத்தினருக்கும், வடக்கு...

2025-02-08 02:10:13