முன்னாள் ஜனாதிபதிகளிற்கு வழங்கப்பட்டுள்ள ஆடம்பர உத்தியோகபூர்வவாசல்ஸதலங்களினால்அரசாங்கத்திற்கு ஏற்படும் இழப்புகள் குறித்து ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க மீண்டும் கருத்து வெளியிட்டுள்ளார்.
தொலைக்காட்சி பேட்டியொன்றில் கருத்துதெரிவித்துள்ள ஜனாதிபதி முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க அரசாங்கம் வழங்கிய வீட்டிலேயே வசிக்கின்றார் அந்த வீட்டின் மாதாந்த வாடகை பெறுமதி 2 மில்லியன் ரூபாய் என தெரிவித்துள்ள ஜனாதிபதி அதேபோன்று முன்னாள் ஜனாதிபதிமைத்திரிபால சிறிசேனவும் 0.9மில்லியன் ரூபாய் இல்லத்தில் வசிக்கின்றார் என குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச குறித்து சில நாட்களிற்கு முன்னர் தெரிவித்த கருத்தினை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வசிக்கும் வீட்டின் வாடகை பெறுமதி மாதம் 4.6 மில்லியன் என குறிப்பிட்டுள்ளார்.
எனினும் சில தலைவர்கள் தங்களிற்கு வழங்கப்பட்ட விசேட சலுகைகளை மீள ஒப்படைத்துள்ளனர் என குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி அரசாங்கம் வழங்கிய இல்லத்தினை ஏற்க மறுத்தமைக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்கவிற்கு நன்றியை தெரிவித்துள்ளார்.
இதேபோன்று முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது உத்தியோகபூர்வ இல்லத்தை சமீபத்தில் மீள கையளித்தார் என ஜனாதிபதிதெரிவித்துள்ளார்.
முன்னாள் பெண்மணி ஹேமா பிரேமதாசவும் தனக்கு வழங்கப்பட்ட வீட்டை சில காலத்திற்கு முன்னர் திருப்பிஒப்படைத்துள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதிகளிற்கு உத்தியோகபூர்வவாசல்ஸ்தலத்தை வழங்குவதை அரசாங்கம் விலக்கிக்கொள்ளுமா என்ற கேள்விக்குபதிலளித்துள்ள ஜனாதிபதி அரசியல் பிரமுகர்களிற்கான தேவையற்ற செலவீனங்களை குறைப்பது குறித்து அரசாங்கம் உறுதியுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM