நாடளாவிய ரீதியில் கடந்த நான்கு மாதங்களில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் தொடர்பாக 25 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
கைதான சந்தேக நபர்களில் இராணுவ மேஜர் ஒருவரும், பொலிஸ் அதிகாரி ஒருவரும், சிவில் பாதுகாப்பு அதிகாரி ஒருவரும் காணப்படுவதோடு அவர்களில் 15 பேர் பாதாள உலக கும்பலை சேரந்தவர்கள் ஆவர்.
சந்தேக நபர்களிடமிருந்து ஏராளமான ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருட்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட ஆயுதங்களில் ரி- 56 ரக துப்பாக்கிகள் - 7, கைத்துப்பாக்கிகள் - 10, ரிவோல்வர்கள் - 14, போர் துப்பாக்கிகள் - 12 ஆகியவை அடங்குகின்றன.
மேலும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களில் 354 கிலோ கிராம் ஹெரோயின், 3847 கிலோ கிராம் கேரள கஞ்சா, 3.8 கிலோகிராம் கொக்கைன், 181.9 கிலோ கிராம் ஹாஷிஷ் மற்றும் 759 கிலோ கிராம் ஐஸ் ஆகியவை அடங்குகின்றதாக பொது பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM