(எம்.ஆா்.எம்.வஸீம்)
அனர்த்தம் ஏற்படப்போவதை அறிந்தும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எந்த ஏற்பாடுகளையும் மேற்கொள்ளாமல் இருந்தது கண்டிக்கத்தக்கது என லங்கா சமசமாஜ கட்சியின் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.
அனர்த்தங்கள் ஏற்படும்போது அதற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை களஞ்சியப்படுத்தி வைத்துக்கொள்ளும் பொருட்டே அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அமைக்கப்பட்டது. கடந்த அரசாங்கத்தில் நான் விஞ்ஞான தொழிநுட்ப அமைச்சராக இருக்கும்போதே இது அமைக்கப்பட்டது.
ஆனால் நாட்டில் தற்போது இடம்பெற்றிருக்கும் சீரற்ற காலநிலை தொடர்பாக வளிமண்டளவியல் திணைக்களம் முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்தும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் அதுதொடர்பாக கவனயீனமாகவே இருந்துள்ளது.
மேலும் வெள்ள அனர்த்தம் ஏற்பட்ட பிரதேசங்களில் தொற்றுநோய்கள் ஏற்படுவதற்கு சா்தியம் இருக்கின்றது. அதனால் வெள்ளம் வடிந்தோடும் பிரதேசங்களில் தொற்று நோய்கள் ஏற்படாமல் தடுப்பதற்கு சுகாதார அமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.
எனவே அரசாங்கம் பாதிக்கப்பட்ட மக்களின் சுகாதாரம் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். அத்துடன் தேவையான வைத்தியர்களை பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு அனுப்பிவைக்கவும் சுகாதார அமைச்சர் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
சோசலிச மக்கள் முன்னணி இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துதெரிவிக்கையிலேயே திஸ்ஸ விதாரண மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM