சட்ட  ரீதியாக வழங்கப்பட்ட மதுபானசாலை அனுமதி பத்திரங்களை பலவந்தமாக இரத்துச் செய்ய முடியாது - பிமல் ரத்நாயக்க

Published By: Vishnu

21 Jan, 2025 | 07:47 PM
image

( எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

அரசாங்கம் புதிதாக மதுபானசாலை அனுமதிப்பத்திரங்களை வழங்கவில்லை, வழங்க போவதுமில்லை. சட்டரீதியில் வழங்கப்பட்ட அனுமதி பத்திரங்களை பலவந்தமான முறையில் இடைநிறுத்தினால் சட்ட சிக்கல்களை ஏற்படுத்தும். அனுமதிப்பத்திரம் சட்டரீதியில் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து அது சட்டரீதியான ஆவணமாகும். பலவந்தமான முறையில் செயற்பட முடியாது என  சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (21) நடைபெற்ற கிளீன் ஸ்ரீ லங்கா செயற்திட்டம்  மீதான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன்,  'கல்முனை - நீலாவணை பகுதியில் புதிதாக  மதுபான நிலையங்களை திறப்பதற்கு எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு அப்பிரதேச மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்.கடந்த அரசாங்கம் வழங்கிய மதுபானசாலை அனுமதிப்பத்திரங்களை இரத்துச் செய்வதாக அரசாங்கம் குறிப்பிட்டது. ஆனால் இதுவரை அதற்கான நடவடிக்கைகள் ஏதும் எடுக்கப்படவில்லை'  என்று குறிப்பிட்டார்.

இதற்கு பதிலளிக்கையில் சபை முதல்வர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றியதாவது,

தேசிய மக்கள் சக்தி தலைமையிலான எமது அரசாங்கம் புதிதாக மதுபானசாலை அனுமதிப் பத்திரங்கள் ஏதும் விநியோகிக்கவில்லை.  

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் பெரும்பாலான மதுபானசாலை அனுமதி பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் மதுபானசாலை பத்திரங்கள் குறித்து பாராளுமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு ஹன்சாட்டில் பதியப்பட்டுள்ளது.

அனுமதிப்பத்திரம் சட்டரீதியில் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து அது  சட்டரீதியான ஆவணமாக கருதப்படும். அரசியல் ரீதியில் விருப்பம் இல்லாவிடினும்  அதனை இரத்து செய்வது சட்ட செயற்பாடாகும். அரசாங்கத்துக்கு பலவந்தமான முறையில் இரத்துச் செய்ய முடியாது.

இருப்பினும் நிர்வாக கட்டமைப்பில் நடவடிக்கைகளை  மேற்கொள்ள முடியும். இவ்வாறான பழைய குப்பை மேடுகளை கிளீன் செய்யவே முயற்சிக்கிறோம். இதுவே செய்த அழிவாகும். அரசாங்கம் புதிதாக மதுபானசாலை அனுமதிப்பத்திரங்களை வழங்கபோவதில்லை. 

சட்டரீதியில் வழங்கப்பட்ட அனுமதி பத்திரங்களை பலவந்தமான முறையில் இடைநிறுத்தினால் சட்ட சிக்கல்களை ஏற்படுத்தும். இருப்பினும் நிர்வாகம் மற்றும் சமூக கட்டமைப்பில் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2025-02-10 06:00:05
news-image

லசந்த விக்கிரமதுங்க படுகொலை விசாரணை சுருக்கத்தை; ...

2025-02-10 02:02:13
news-image

இழப்புக்களை ஏற்படுத்த தூண்டியவர்களை இனங்கண்டுள்ளோம்; அவர்களுக்கெதிராக...

2025-02-10 01:54:10
news-image

நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட திடீர் மின்தடை ...

2025-02-10 01:46:26
news-image

எந்தவொரு வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர்...

2025-02-09 15:15:31
news-image

பேச்சுவார்த்தைகளில் இணக்கப்பாடு இன்றேல் நிச்சயம் நாட்டுக்கு...

2025-02-09 15:22:37
news-image

ஜனாதிபதி நீதித்துறை கட்டமைப்பில் தலையீடு செய்யப்போவதில்லை...

2025-02-09 19:41:29
news-image

Clean sri lanka நிகழ்ச்சித் திட்டம்...

2025-02-09 23:19:15
news-image

யாழ். பல்கலைக்கழக முகாமைத்துவபீட மாணவர்களிடையே மோதல்...

2025-02-09 22:25:18
news-image

பா.உறுப்பினர்கள்122 கோடி ரூபா இழப்பீடு பெற்றுக்கொண்டமை...

2025-02-09 17:13:39
news-image

வீடுகளுக்கு தீ வைத்ததாலே அரங்கத்துக்கு நஷ்டஈடு...

2025-02-09 17:28:01
news-image

அதிபர் - ஆசிரியர் தொழிற்சங்கங்களுக்கும் பிரதமருக்கும்...

2025-02-09 19:55:46