(நெவினல் அன்தனி)
கோலாலம்பூர், பேயுமாஸ் ஓவல் மைதானத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (21) நடைபெற்ற மலேசியாவுக்கு எதிரான ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 உலகக் கிண்ண ஏ குழு போட்டியில் இந்தியாவின் அறிமுக வீராங்கனை வைஷ்ணவி ஷர்மா ஹெட்-ட்ரிக்குடன் 5 விக்கெட்களைக் கைப்பற்ற இந்தியா 10 விக்கெட்களால் வெற்றிபெற்றது.
இடது கை சுழற்பந்து வீச்சாளரான வைஷ்ணவி ஷர்மா இந்த வருட 19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் முதலாவது ஹெட்-ட்ரிக்கை பதிவு செய்து வரலாறு படைத்தார்.
19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் பதிவான இரண்டாவது ஹெட்-ட்ரிக் இதுவாகும்.
தென் ஆபிரிக்காவில் 2023இல் நடைபெற்ற அங்குரார்ப்பண ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 உலகக் கிண்ண அத்தியாயத்தில் ஸ்கொட்லாந்துக்கு எதிரான போட்டியில் தென் ஆபிரிக்காவின் மெடிசன் லாண்ட்ஸ்மன் முதலாவது ஹெட் - ட்ரிக்கை பதிவு செய்து சாதனை நிலைநாட்டியிருந்தார்.
மலேசியாவுக்கு எதிரான இன்றைய போட்டியில் ஹெட் - ட்ரிக் முறையில் விக்கெட்களை வீழ்த்திய வைஷ்ணவி ஷர்மா, ஒரு ஓட்டமற்ற ஓவர் உட்பட 4 ஓவர்களில் 5 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டி வரலாற்றில் இதுவே மிகச் சிறந்த பந்துவீச்சு பெறுதியாகும்.
சோனம் யாதவ்வுக்கு பதிலாக இந்திய அணியில் இடம்பிடித்த அறிமுக வீராங்கனை வைஷ்ணவி, மலேசியாவை 14.3 ஓவர்களில் 31 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க உதவினார்.
அவர் தனது முதலாம் கட்ட பந்துவீச்சில் மலேசிய அணித் தலைவி நூர் டானியா சியூஹடாவையும் நுரிமன் ஹியாதாவை யும் ஆட்டம் இழக்கச் செய்ததுடன் இரண்டாம் கட்ட பந்துவீச்சில் நூர் ஐன் பின்தி ரோஸ்லான், நூர் இஸ்மா டானியா, சித்தி நஸ்வா ஆகியோரை ஹெட் - ட்ரிக் முறையில் வெளியேற்றினார்.
வைஷ்ணவிக்கு பக்கபலமாக பந்துவீசிய ஆயுஷி ஷுக்லா ஒரு ஓட்டமற்ற ஓவர் உட்பட 3.3 ஓவர்களில் 8 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களை வீழ்த்தினார்.
மலேசியா பெற்ற 31 ஓட்டங்களுக்கு பதிலளித்து துடுப்பெடுத்தாடிய இந்தியா 2.5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 32 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
ட்ரிஷா கொங்காடி 27 ஓட்டங்களுடனும் இந்த வருட மகளிர் பிறீமியர் லீக் போட்டிக்கான ஏலத்தில் மும்பை இண்டியன்ஸினால் 1.60 கோடி ருபாவுக்கு வாங்கப்பட்ட ஜீ. கமலினி 4 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.
ஆட்டநாயகி: வைஷ்ணவி ஷர்மா
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM