மட்டக்களப்பில் வெள்ளத்தினால் 11971 பேர் பாதிப்பு 9 முகாம்களில் 921 பேர் தஞ்சம்

Published By: Vishnu

21 Jan, 2025 | 06:41 PM
image

மட்டக்களப்பு மாவட்டத்தில் சீரற்ற கால நிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால் 11,971 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 9 முகாம்களில் 921 பேர் தஞ்சமடைந் துள்ளதுடன் 17 வீடுகள் பகுதியளவில் பாதிக்கப்பட்டுள்ளதுடன் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் வயல் நிலங்கள் நீரில் மூழ்கி பயிர்தொழல் பாதிக்கப்பட்டதுடன் மாவட்டத்திலுள்ள சில பிரதேசங்களுக்கு; வெளிமாவட்டத்துக்குமான போக்குவரத்து மற்றும் ரயில் சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.

கடந்த 18 ம் திதி ஆரம்பித்த கன மழையினால் மாவட்டதிலுள்ள பெரிய குளமான உன்னிச்சை குளம் மற்றும் குளங்கள் யாவும் நிரம்பியதையடுத்து தேவைக்கு எற்றால் போல வான்கதவுகள் திறக்கப்பட்டதையடுத்து வயல் நிலங்கள் வெள்ள நீரில் மூழ்கியது.

இந்த நிலையில் வெள்ளத்தினால்  மாவட்டதிலுள்ள தாழ்நிலப்பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியதையடுத்து 3737 குடும்பங்களைச் சோர்ந்த 11971 பேர் பாதிக்கப்பட்டதுடன் 17 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் 3037 குடும்பங்கனைச் சேர்ந்த 10031 பேர் வீடுகளை விட்டு வெளியேறி உறவினர் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளதுடன் 9 முகாம்களில் 334 குடும்பங்களைச் சேர்ந்த 921 பேர் தஞ்சமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவம் தெரிவித்துள்ளது.

இதேவேளை மாவட்டதிலுள்ள பல பிரதேசத்திகளில் வீதிக்கு மேலால்  4 அடி உயரத்துக்கு வெள்ள நீர் பாய்ந்து ஓடுவதால் வெல்லாவெளிக்கும் மண்டூருக்கும் இடையிலான போக்குவரத்தும் கிரானுக்கும்  புலிபாய்ந்தகல் பிரதேசத்துக்குமான போக்குவரத்தும்  துண்டிக்கப்பட்டதுடன் அதற்கான படகு சேவைககள் இடம்பெற்று வருகின்றது.

இந்த வெள்ள அனர்த்தினால் பாதிக்கப்பட்வர்களுக்கு சமைத்த உணவு வழங்கப்பட்டுவருவதுடன் தொடர்ந்து மழை பெய்தால் வெள்ளத்தினால் இன்னும் பல குடும்பங்கள் குடியிருப்புக்களை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதுடன் தொடர்ந்து மழைபெய்துவருவதால் மக்களின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துவருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹிக்கடுவை கடலில் மூழ்கிய வெளிநாட்டுப் பெண்...

2025-02-08 12:26:54
news-image

12 பிரதி பொலிஸ் மா அதிபர்கள்,...

2025-02-08 12:18:00
news-image

சம்மாந்துறையில் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது

2025-02-08 11:58:07
news-image

குருணாகலில் உள்நாட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர் கைது...

2025-02-08 12:12:59
news-image

வத்தளையில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது...

2025-02-08 12:09:11
news-image

திருகோணமலை – கொழும்பு பகல்நேர ரயில்...

2025-02-08 11:55:17
news-image

நாரங்கல பகுதியில் புதையல் தோண்டிய நால்வர்...

2025-02-08 11:51:45
news-image

கணவனால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு மனைவி...

2025-02-08 11:28:56
news-image

மாத்தறையில் கால்வாயிலிருந்து ஆணின் சடலம் மீட்பு!

2025-02-08 11:19:51
news-image

யாழ். கட்டைக்காடு கடற்கரையில் கொக்கெய்ன் போதைப்பொருள்...

2025-02-08 11:02:22
news-image

முல்லைத்தீவில் பஸ் சாரதி மீது வாள்வெட்டுத்...

2025-02-08 09:59:53
news-image

வவுனியாவில் பாடசாலை ஒன்றில் உயர்தர மாணவன்...

2025-02-08 09:57:57