(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
சிலாபம் பெருந்தோட்டக்கம்பனிக்கு சொந்தமான காணிகளில் இடம்பெறும் மணல் அகழ்வு மோசடிகளின் பின்னணியில் இரண்டு முக்கிய அரசியல்வாதிகள் இருப்பதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (21) இடம்பெற்ற வாய் மூல விடைக்கான கேள்வி நேரத்தில் அஜித் கிஹான் எம்.பி எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் கூறுகையில்,
சிலாபம் பெருந்தோட்ட கம்பெனிக்கு சொந்தமான பகுதியில், ஒதுக்கப்பட்ட அளவை விட அதிகமாக மணல் அகழ்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது ஒரு பாரிய மோசடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான விசாரணைகள் தற்போது இடம்பெறுகின்றன. சுமார் 400 மில்லியன் ரூபா ஊழல் கொடுக்கல் வாங்கல் மற்றும் மோசடி நடந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும் இந்த மோசடிக்கு இறுதியில் யார் பொறுப்பு என்று சொல்ல முடியாது.
ஆனால் இந்த மணல் அகழ்வு மோசடிகளின் பின்னணியில் இரண்டு முக்கிய அரசியல்வாதிகள் ஈடுபட்டுள்ளனர். பல ஒப்பந்ததாரர்கள் பற்றிய தகவல்களும் கிடைத்துள்ளன என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM