(நெவில் அன்தனி)
இலங்கையின் புகழ்பெற்ற வேகப்பந்து வீச்சாளரும் ஸ்லிங்க என அழைக்கப்படுபவருமான லசித் மாலிங்க, தனது முதலாவது நூலான 'Killer' (கில்லர்) என்ற புத்தகத்தை வெளியிட்டார்.
பிரபல கிரிக்கெட் வீரர்கள், நிருவாகிகள் ஆகியோர் பங்குபற்றிய இந்த நூல் வெளியீட்டு விழா கொழும்பில் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது
மலிங்க வெளியிட்டுள்ள இந்த நூலில் பந்துவீச்சு பற்றிய 21 நுட்பங்கள் விரிவாக எழுதப்பட்டுள்ளது. இது பந்துவீச்சாளர்களுக்கு மட்டுமல்லாமல் துடுப்பாட்ட வீரர்களுக்கும் தேவையான ஆலோசனைகளை வழங்குவதாக அமைந்துள்ளது.
'நான் எழுதிய கில்லர் எனும் இந்தப் புத்தகம் பந்துவீச்சாளர்களுக்கு மட்டுமல்ல் துடுப்பாட்ட வீரர்களும் பயன்தரக்கூடியது. இந்தப் புத்தகம் கிரிக்கெட் வீரர்கள், பயிற்றுநர்கள் ஆகியோருக்கு மதிப்புமிக்க பயிற்சி நுண்ணறிவுகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் விளையாட்டின் நுணுக்கங்களைப் புரிந்துகொள்ளவும் தேர்ச்சி பெறவும் உதவும் என நான் நம்புகிறேன்' என புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய லசித் மாலிங்க தெரிவித்தார்.
இந்த புத்தக வெளியீட்டு விழாவில் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் மற்றும் ஆசிய கிரிக்கெட் பேரவை ஆகியவற்றின் தலைவர் ஷம்மி சில்வா, ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிருவாகிகள், இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் ஜாம்வான்களான சனத் ஜயசூரிய, மஹேல ஜயவர்தன, சமிந்த வாஸ், அஜந்த மெண்டிஸ், மார்வன் அதபத்து உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM